ETV Bharat / sports

பேட் பிடித்த கையால் மைக் பிடிக்கும் தோனி! - இந்தியா - வங்கதேசம் பகலிரவு டெஸ்ட் போட்டி

இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையே கொல்கத்தாவில் நடைபெறவுள்ள பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி வர்ணனையாளராக ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Dhoni
author img

By

Published : Nov 6, 2019, 1:03 PM IST

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி மூன்று டி20, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில், கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக நவம்பர் 22ஆம் தேதி நடைபெறவுள்ளது. இவ்விரு அணிகளும் விளையாடும் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.

Dhoni
தோனி

இந்தப் போட்டியை பிரபலப்படுத்தும் விதமாக பிசிசிஐயின் தலைவர் கங்குலி பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுவருகிறார். அந்தவகையில், இந்த வரலாற்று சிறப்புமிக்கப் போட்டியில் தோனியை வர்ணனையாளராக்க இந்தத் தொடரை ஒளிப்பரப்புகின்ற ஸ்டோர் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து அந்நிறுவனம் பிசிசிஐக்கும், தோனிக்கும் மின்னஞ்சல் அனுப்பியுள்ளதாக ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒருவேளை பிசிசிஐ, தோனி இரு தரப்பிமிடமிருந்தும் சம்மதம் வந்தால், நிச்சயம் ரசிகர்களுக்கு இந்தப் போட்டி ட்ரீட்டாக அமையும். ஏனெனில், இதுவரை செய்தியாளர்களின் சந்திப்பில் மட்டும் தோனியின் குரலை கேட்ட ரசிகர்களுக்கு மேட்ச் முழுவதும் தோனியின் குரலைக் கேட்டு அனுபவிக்க ஒருநல்ல வாய்ப்பாக இருக்கும் என தெரிகிறிது.

தோனி மட்டுமின்றி, இந்தப் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை பேட்டிங், விக்கெட் கீப்பிங் என பிசியாக இருந்த இவரது கைகள் தற்போது மைக் பிடித்து வார்த்தைகளில் விளையாடவுள்ளது.

இதையும் படிங்க: கிரிக்கெட்டில் இதை எல்லோரும் கண்டிப்பா பார்த்திருப்போம்... தோனியின் ஃப்ளாஷ்பேக்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.