இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி கொல்கத்தாவில் எம்.எஸ்.தோனி கிரிக்கெட் அகாடமி - கொல்கத்தா என்னும் பெயரில் கிரிக்கெட் அகாடமியை தொடங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர், பாட்னா, டெல்லி, நாக்பூர், வாரணாசி, லக்னோ உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கிரிக்கெட் அகாடமிகளை தொடங்கியுள்ள இந்திய வீரர் தோனி, தற்போது கொல்கத்தாவில் கிரிக்கெட் அகாடமியை தொடங்கவுள்ளார்.
இந்த அகாடமி நாளை தொடங்கப்படவுள்ள நிலையில், சென்னை வீரர்களான ஹர்பஜன் சிங், தாஹிர் ஆகியோர் தொடங்கிவைக்க உள்ளனர். இந்த விழாவில் தோனி கலந்துகொள்ளமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.