டி20 போட்டிகளில் ஒரு வீரரை ஸ்ட்ரைக் ரேட்க்களை வைத்தே ஐபிஎல் நிர்வாகம் மதிப்பிடும். குறுகிய ஓவர்கள் கொண்ட போட்டியில், பேட்ஸ்மேன்களைப் பொறுத்த வரையில் ஆட்டமிழக்காமல் அதிரடியாக ஆட வேண்டும். அது தான் அவர் சார்ந்துள்ள அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும்.
அவ்வாறு ஆடினால் மட்டுமே ஒரு வீரருடைய ஆவரேஜ் மற்றும் ஸ்ட்ரைக் ரேட் உயரும். அதில் ஐபிஎல் போட்டிகளில் அதிக ஆவரேஜ் மற்றும் ஸ்ட்ரைக் ரேட்கள் வைத்துள்ள வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
ஐந்தாம் இடம் : வெஸ்ட் இண்டீஸ் வீரரான லெண்டல் சிம்மன்ஸ் 126.64 ஸ்ட்ரைக் ரேட்டுடன், 39.96 ரன்கள் ஆவரேஜும் வைத்துள்ளார். இவர் மும்பை அணிக்காக 29 போட்டிகளில் பங்கேற்று 1079 ரன்களைக் குவித்துள்ளார்.
நான்காம் இடம் : சென்னை அணியின் வீரர் தோனி, 11 ஐபிஎல் தொடர்களில் பங்கேற்றுள்ளார். இவர் 158 இன்னிங்க்ஸில் 138.19 ஸ்ட்ரைக் ரேட்டுடன், 40.16 ரன்களை ஆவரேஜ் வைத்து 4016 ரன்களைக் குவித்துள்ளார்.
மூன்றாம் இடம் : ஹைதராபாத் அணியின் கேப்டனான டேவிட் வார்னர் இந்த பட்டியலில் இருப்பது ஆச்சரியமில்லை. ஏனென்றால் ஒவ்வொரு தொடரின்போதும் தனி ஆளாக நின்று வென்றெடுப்பார். இதுவரை 114 போட்டிகளில் பங்கேற்று 142 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 40.54 ரன்களை ஆவரேஜாக வைத்துள்ளார்.
இரண்டாம் இடம் : கிறிஸ் கெய்லின் பெயரில்லாமல் எந்த டி20 சாதனைகளையும் எழுதிவிடமுடியாது. இதுவரை 112 ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று 150.72 ஸ்ட்ரைக் ரேட்டுடன், 41.18 ரன்கள் ஆவரேஜுடன் 3994 ரன்கள் எடுத்துள்ளார்.
முதல் இடம் : கடந்த தொடரில் ஹைதராபாத் அணிக்கு தலைமை தாங்கிய கேன் வில்லியம்சன் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். இவர் கடந்த தொடரில் 42.44 ஆவரேஜுடன், 137.41 ஸ்ட்ரைக் ரேட் வைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.