இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆவார். உலகக்கோப்பை தொடருக்குப்பின் ராணுவப் பயிற்சி, சிறிய ஓய்வு என இந்திய அணியில் இருந்து விலகியிருக்கும் தோனி, அவரது சொந்த ஊரான ராஞ்சியில் நடைபெற்ற இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியைக் காண வந்திருந்தார்.
இப்போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் ஒன்பது விக்கெட்டுகள் இழப்பிற்கு 497 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால், ஃபாலோ ஆன் பெற்று விளையாடியது.
இரண்டாவது இன்னிங்ஸிலும் சொதப்பிய தென் ஆப்பிரிக்க அணி நான்காம் நாளான இன்று காலையிலேயே 133 ரன்களுக்குள் சுருண்டது. இதனால் மூன்றாவது போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ், 202 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது.
இப்போட்டிக்குப்பின் இந்திய அணியின் ஓய்வறைக்குச் சென்ற தோனி அங்கிருந்த வீரர்களைச் சந்தித்தார். நீண்ட நாட்களுக்குப்பின் தனது நண்பர்களைச் சந்தித்த தோனி அவர்களிடம் கலந்துரையாடினார்.
-
.@msdhoni marked his presence at JSCA in style as he took his new car 'Jonga' for a spin!💙😇#Dhoni #TeamIndia #Ranchi pic.twitter.com/HKNmT5KavZ
— MS Dhoni Fans Official (@msdfansofficial) October 22, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">.@msdhoni marked his presence at JSCA in style as he took his new car 'Jonga' for a spin!💙😇#Dhoni #TeamIndia #Ranchi pic.twitter.com/HKNmT5KavZ
— MS Dhoni Fans Official (@msdfansofficial) October 22, 2019.@msdhoni marked his presence at JSCA in style as he took his new car 'Jonga' for a spin!💙😇#Dhoni #TeamIndia #Ranchi pic.twitter.com/HKNmT5KavZ
— MS Dhoni Fans Official (@msdfansofficial) October 22, 2019
இன்று மைதானத்திற்கு வந்திருந்த தோனி தனது புதிய ஜோங்கா ஜீப்பில் வந்திருந்தார். நிஸ்ஸான் நிறுவனத்தின் இந்த ஜோங்கா வகை ஜீப்புகள் இந்திய ராணுவத்தில் பயன்படுத்தப்படுகிறது. முன்னதாக ஞாயிற்றுக்கிழமை மாலை தோனி இந்த ஜீப்பில் வீட்டின் அருகேயுள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்ற புகைப்படங்களும் வைரலாகின.
வாகனப்பிரியரான தோனி பல பைக்குகளையும் கார்களையும் வைத்துள்ளார். அவர் ஃபெராரி 599 ஜிடிஓ, ஹம்மர், ஜிஎம்சி சியர்ரா போன்ற விலையுயர்ந்த கார்களையும், கவாஸகி, நின்ஜா ஹெச்2, சுசூகி ஹயபூசா போன்ற பைக்குகளையும் வைத்திருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன் தோனி ஜீப் நிறுவனத்தின் கிராண்ட் செரோக்கி ரக ஜீப்பை வாங்கியிருந்தார். தற்போது தோனியின் வாகனங்களின் பட்டியலில் இந்த ஜோங்காவும் இணைந்துள்ளது.