ETV Bharat / sports

டெல்லி அணிக்கு 179 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த கொல்கத்தா!

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்களை சேர்த்தது.

kolkata knight riders
author img

By

Published : Apr 12, 2019, 10:08 PM IST

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதின. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வைத்து நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி கொல்கத்தா அணியின் ஜோய் டென்லி மற்றும் சுப்மேன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் டென்லி, இஷாந்த் சர்மா வீசிய முதல் பந்திலேயே போல்ட் ஆகி வெளியேறி கொல்கத்தா அணிக்கு அதிர்ச்சி தந்தார். இதையடுத்து மைதானத்தில் நுழைந்த உத்தப்பா, சுப்மேன் கில்லுடன் இணைந்து பொறுப்பான ஆட்டத்தில் ஈடுபட்டார்.

டெல்லி அணியினரின் பந்து வீச்சை மிக சுலபமாக எதிர்கொண்ட இந்த ஜோடி, பந்தை அவ்வப்போது பவுண்டரிக்கும், சிக்சருக்கும் விரட்டி ரசிகர்களை குதூகலப்படுத்தியது.

இதனிடையே டெல்லி அணி 63 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ராபின் உத்தப்பா (28 ரன்கள்) கீமோ பால் பந்துவீச்சில் கேட்ச் ஆகி வெளியேறினார். இதன்பின்னர் களமிறங்கிய வீரர்களும் மந்தமான ஆட்டத்தை வெளிபடுத்த, சுப்மேன் கில் மட்டும் அரை சதத்தை கடந்து கொல்கத்தா அணிக்கு ஆறுதல் அளித்தார்.

இந்நிலையில், கொல்கத்தா அணியின் நம்பிக்கை நட்சத்திரமான 'அசுரன்' ரஸல் வழக்கம்போல் தனது கட்டுக்கடங்காத காட்டு அடியை காண்பிக்க ஆரம்பித்தார். பந்தை ரசிகர்களின் இருக்கைக்கே பறக்க விட்ட ரஸலை நிதானப்படுத்த வழியில்லாமல் வெதும்பிய டெல்லி அணியினர், விழி பிதுங்கி மைதானத்திற்குள் வாயடைத்து போயினர்.

இந்நிலையில், 18.2வது ஓவரில் ரஸஸ் (45 ரன்கள், 4 சிக்சர்கள், 3 பவுண்டரிகள்) கிறிஸ் மோரிஸ் வீசிய பந்தை மைதானத்தின் வெளியே பறக்க விடும்படி அடிக்க, அது ரபாடாவின் கையில் சிக்கியது.

இதையடுத்து களமிறங்கிய வீரர்கள் அணியின் ரன்வேகத்துக்கு உதவ, நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்களை சேர்த்தது. டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் கிறிஸ் மோரிஸ், ரபாடா, கீமோ பால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இஷாந்த் சர்மா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

இதனிடையே 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய பிருத்வி ஷா மற்றும் ஷிகா் தவான் ஆகியோர் தனது பேட்டிங்கை தொடங்கி விளையாடி வருகின்றனர்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.