டி10 லிக் இரண்டாவது சீசன் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற இரண்டாவது லீக் ஆட்டத்தில் ஷேன் வாட்சன் தலைமையிலான டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணி, இயான் மோர்கன் தலைமையிலான டெல்லி புல்ஸ் அணியை எதிர்கொண்டது.
இந்தப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெல்லி புல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய டெக்கான் அணியின் கேப்டன் வாட்சன் அதிரடியாக விளையாடி டி10 கிரிக்கெட் போட்டியில் தனது மூன்றாவது அரைசத்தை பதிவு செய்தார்.
இதன் மூலம் டெக்கான் அணி 10 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 102 ரன்களை சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஷேன் வாட்சன் 57 ரன்களை குவித்தார்.
அதன்பின் வெற்றியை நோக்கி களமிறங்கிய டெல்லி அணி தொடக்கத்தில் குசால் பெரேரா, ஸ்டிர்லிங்கின் விக்கெட்டை இழந்து தடுமாறியது. இருப்பினும் அதன்பின் களமிறங்கிய அணியின் கேப்டன் மோர்கன் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார்.
-
Delhi Bulls won the opening day, 2nd Match of 'Aldar Properties Abu Dhabi T10' by 7 wickets!#AbuDhabiT10 #t10league #t10season3 #inAbuDhabi #aldarproperties #DeccanGladiators #DelhiBulls pic.twitter.com/bFFUXNxwuO
— T10 League (@T10League) November 15, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Delhi Bulls won the opening day, 2nd Match of 'Aldar Properties Abu Dhabi T10' by 7 wickets!#AbuDhabiT10 #t10league #t10season3 #inAbuDhabi #aldarproperties #DeccanGladiators #DelhiBulls pic.twitter.com/bFFUXNxwuO
— T10 League (@T10League) November 15, 2019Delhi Bulls won the opening day, 2nd Match of 'Aldar Properties Abu Dhabi T10' by 7 wickets!#AbuDhabiT10 #t10league #t10season3 #inAbuDhabi #aldarproperties #DeccanGladiators #DelhiBulls pic.twitter.com/bFFUXNxwuO
— T10 League (@T10League) November 15, 2019
அதிரடியாக விளையாடிய மோர்கன் 27 பந்துகளில் 52 ரன்களை குவித்து அசத்தினார். இதன் மூலம் டெல்லி புல்ஸ் அணி 9.3 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெறச்செய்த மோர்கன் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: மீண்டும் அசத்திய மயங்க்... வலுவான நிலையில் இந்தியா..!