ETV Bharat / sports

வைகைப்புயலாக மாறிய வார்னர்... கலாய்த்த ரசிகர்கள் கப்சிப்! - வார்னர்

பிர்மிங்ஹாம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஃபீல்டிங்கின்போது தன்னை கலாய்த்த ரசிகர்களை, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் வார்னர் வடிவேலு போன்று செய்கை செய்து பதிலளித்துள்ளார்.

warner
author img

By

Published : Aug 4, 2019, 1:18 PM IST

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து-ஆஸ்திரேலிய அணிகள் மோதிவருகின்றன. இந்தப் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், பேன்கிராஃப்ட் ஆகிய மூன்று பேரும் விளையாடினர்.

இப்போட்டியில் டாஸ் வென்று ஆஸ்திரேலிய அணி பேட்டிங்யை தொடங்கிய வேகத்தில் வார்னர் இரண்டு ரன்னில் ஆட்டமிழந்தார். அச்சமயத்தில் அவர் பெவிலியன் திரும்பியபோது மைதானத்திலிருந்து ரசிகர்கள் வார்னரை நோக்கி சாண்ட் பேப்பரை காண்பித்து கிண்டல் செய்தனர்.

warner
வார்னரை நோக்கி சாண்ட்பேப்பரை காண்பித்த ரசிகர்கள்

பின்னர் இங்கிலாந்து ரசிகர்களின் வாயை அடைக்கும் விதமாக விளையாடிய ஸ்டீவ் ஸ்மித் 144 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 284 ரன்கள் எடுக்க உதவினார்.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி சிறப்பாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டது. அப்போது மைதானத்தில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த வார்னரை நோக்கி மீண்டும் ரசிகர்கள் கேலி செய்துள்ளனர். அதில் ஒரு ரசிகர் வார்னரின் பாக்கெட்டில் சாண்ட்பேப்பர் உள்ளது என கத்தியுள்ளார்.

இதைக்கேட்ட வார்னர் உடனடியாக தனது இரண்டு பேண்ட் பாக்கெட்டிலும் கையை விட்ட வெளியே எடுத்து அதில் ஏதும் இல்லை என்று காண்பித்தார்.

இந்த நிகழ்வு இங்கிலீஸ்காரன் படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு செய்வது போன்றே அமைந்திருந்தது. வார்னரின் இந்த பதில் அங்கிருந்த ரசிகர்களின் மனதை கவர்ந்ததோடு அவர்களின் வாயையும் அடைத்தது.

இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 374 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்பின் ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியபோது மீண்டும் வார்னர், பேன்கிராஃப்ட் ஆகியோர் வேகமாக தங்களின் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு 124 ரன்களை குவித்துள்ளது. ஸ்மித் 46 ரன்களுடனும், ஹெட் 21 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.