ETV Bharat / sports

'மக்களைவிட கிரிக்கெட் ஒன்றும் பெரிதல்ல' - ஹர்பஜன் சிங்! - ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசனை

கோவிட்-19 பெருந்தொற்றால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், நான் கிரிக்கெட்டைப் பற்றி யோசிக்கவில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

Cricket is a very small thing in front of the country: Harbhajan Singh

author img

By

Published : Mar 29, 2020, 9:41 AM IST

கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக இதுவரை உலகம் முழுவதும், ஆறு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தும் உள்ளனர்.

இதனால் பல்வேறு நாடுகளும் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. அந்தவகையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், கடந்த 24ஆம் தேதி 21 நாள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதன் காரணமாக ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசனை ஏப்ரல் 15ஆம் தேதி வரை ஒத்திவைக்க பிசிசிஐயும் உத்தரவிட்டது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். ஐபிஎல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,

"கடந்த 15 நாள்களாக நான் கிரிக்கெட்டைப் பற்றி துளியும் சிந்திக்கவில்லை. நாட்டு மக்களைவிட கிரிக்கெட் ஒன்றும் பெரிதானது அல்ல. நான் ஐபில் அல்லது கிரிக்கெட்டைப் பற்றி தற்போது சிந்தித்தால் நான் சுயநலவாதியாகத்தான் இருப்பேன்.

என்னுடைய முன்னுரிமை எப்போதும் ஆரோக்கியத்திற்குத்தான். நாம் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தால் மட்டுமே விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும். தற்போது கிரிக்கெட் என்னுடைய எண்ணங்களில் கூட கிடையாது" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய ஹர்பஜன், "ஊரடங்கு அறிவிப்பை வெளியிடுவதற்கு முன் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலையை நாம் சிந்தித்திருக்க வேண்டும். தற்போது அவர்கள் தங்குவதற்கு இடம், சாப்பாடு, வேலை என அனைத்தையும் இழந்துள்ளனர்.

அரசு அவர்களுக்கு பணம், சாப்பாடு ஆகியவை கிடைக்கும் என உறுதியளித்திருக்க வேண்டும். ஆனால் தற்போது தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்து, முடியாமல் தவித்துவருகின்றனர். இப்படியான விஷயங்கள் எனக்கு மிகவும் கவலையைத் தருகின்றது” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:மிகச்சிறந்த 50 ஐபிஎல் போட்டிகள்; நாளை முதல் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.