ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணிக்காக மெலனி ஜோன்ஸ் 1997ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை விளையாடினார். அதையடுத்து ஓய்வுபெற்ற ஜோன்ஸ், தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியின் செயல்பாடுகள் குறித்து பேசிவந்தார்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் இயக்குநராக மெலனி ஜோன்ஸை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து ஜோன்ஸ் பேசுகையில், இந்த பணி மேற்கொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளேன். ஆஸ்திரேலிய கிரிக்கெட்டை வலுப்படுத்தவும், அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீராங்கனைகளையும் உருவாக்கவும் ஆவலாக உள்ளேன் என்றார்.
மேலும் இதுகுறித்து பேசிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் சேர்மேன் இயர்ல் எடிங்ஸ் பேசுகையில் , மெலனி ஜோன்ஸின் பங்களிப்பு ஆஸ்திரேலிய கிரிக்கெட்டை அடுத்த இடத்திற்கு கொண்டு செல்லும். அவருடைய கள அனுபவமும், விளையாட்டு பற்றிய புரிதலும் தற்போதுள்ள வீராங்கனைகளுக்கு பெரும் ஊக்கத்தைக் கொடுக்கும். தற்போது ஜோன்ஸின் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியுள்ளார் என்றார்.
இதையும் படிங்க: 'தமிழனாய் வாழ்வது எனக்குப் பெருமை' - ட்விட்டரில் பதிவிட்ட இந்திய கிரிக்கெட் கேப்டன்!