கோவிட்-19 பெருந்தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது. அந்நாட்டில் இதுவரை ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், 19ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர். மேலும் அந்நாட்டில் ஜூலை மாதம் வரை எந்தவித கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தன் நாட்டு மக்களுக்கு உதவ, இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், தன் ஓய்வுக்கு முன்னதாக விளையாடிய போட்டியின் போது பயன்படுத்திய ஜெர்சி, பேட், கிளவுஸ் உள்ளிட்டவைகளை தனது கையொப்பமுடன் ஏலத்தில் விற்பதாக அறிவுத்துள்ளார்.
இதுகுறித்து ஆண்டர்சன் தனது ட்விட்டர் பதிவில், 'நான் தற்போது ஏலத்தில் எனது கடைசி டெஸ்ட் போட்டியின் போது பயன்படுத்திய ஜெர்சி, ஸ்டம்ப்ஸ், பேட், கிளவுஸ் ஆகியவற்றை எனது கையொப்பத்துடன் ஏலத்தில் விற்பனை செய்யவுள்ளேன்' என்று பதிவிட்டுள்ளார்.
-
Forgot to add that I will sign all of the items!!
— James Anderson (@jimmy9) April 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Forgot to add that I will sign all of the items!!
— James Anderson (@jimmy9) April 25, 2020Forgot to add that I will sign all of the items!!
— James Anderson (@jimmy9) April 25, 2020
இங்கிலாந்து அணிக்காக இதுவரை 151 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜேம்ஸ் ஆண்டர்சன், 584 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் இங்கிலாந்து அணிக்காக அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் தன்னிடம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஆன்லைன் வில்வித்தை தொடர் இனி நேரலையிலும்...!