ETV Bharat / sports

கரோனாவுக்கு நிதி: ஐபிஎல் கிட்களை ஏலத்தில் விடும் கோலி, வில்லியர்ஸ்! - கரோனாவுக்கு நிதி திரட்ட முன்வந்துள்ள கோலி, டி வில்லியர்ஸ்

கரோனா வைரஸுக்கு எதிராக நிதி திரட்டும் வகையில், ஆர்.சி.பி அணியின் கேப்டன் கோலி, டி வில்லியர்ஸ் ஆகியோர் 2016 ஐபிஎல் தொடரில் பயன்படுத்திய கிரிக்கெட் கிட்களை ஏலத்தில் விடவுள்ளனர்.

Combating COVID-19: AB De Villiers, Virat Kohli put 2016 IPL match kits on auction

author img

By

Published : Apr 28, 2020, 9:33 AM IST

உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு லட்சத்து, ஏழாயிரத்து 103 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவையும் விட்டுவைக்காத இப்பெருந்தொற்றால் 27,892 பேர் பாதிக்கப்பட்டும் 872 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

கரோனா வைரஸால் பல்வேறு விளையாட்டு போட்டிகளும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, இந்தியாவில் டி20 திருவிழாவாக கருதப்படும் ஐபிஎல் டி20 தொடரின் 13ஆவது சீசன் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு விளையாட்டு வீரர்களும் நிதி திரட்டிவருகின்றனர்.

இந்நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிதி திரட்ட பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் கோலி, டி வில்லியர்ஸ் ஆகியோர் முன்வந்துள்ளனர். அதன்படி 2016ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பச்சை நிற ஜெர்சி அணிந்து சதம் அடித்து வான வேடிக்கை நிகழ்த்தினர்.

  • Cricket has given me many incredible memories - and, among the most precious, stands the partnership with Virat Kohli, playing for RCB and against Gujarat Lions in 2016.

    Everything clicked on what was a truly… https://t.co/W4OSshMIFc

    — AB de Villiers (@ABdeVilliers17) April 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இப்போட்டியில் இவர்கள் பயன்படுத்திய பேட், கிளவ்ஸ், உள்ளிட்ட கிரிக்கெட் கிட்களை ஆன்லைன் மூலமாக ஏலத்தில் விடவுள்ளனர்.

இதனை டி வில்லியர்ஸ் தனது இன்ஸ்டாகிராம், ட்விட்டர் பக்கத்தில் உறுதிசெய்தார். இது குறித்து அவர் தனது பதிவில், "அந்த ஸ்பெஷல் போட்டியில் பயன்படுத்திய கோலியின் பேட், கிளவ்ஸ், எனது பேட், டி ஷர்ட் அடங்கிய ஸ்பெஷல் கிட்டை நாங்கள் ஆன்லைனில் ஏலத்தில் விடவுள்ளோம்.

இதன் மூலம் பெறப்படும் தொகை இந்தியா, தென் ஆப்பிரிக்காவில் உள்ள அறக்கட்டளைக்கு சரிசமமாக பிரித்து தரப்படும். மே 10ஆம் தேதி இந்த ஏலம் முடிந்த பிறகு நானே தனிப்பட்ட முறையில், ஏலத்தில் வெற்றிபெற்ற நபரிடம் தொடர்புகொண்டு, அவரது வீட்டிற்கு இந்த கிட் கிடைப்பதில் நடவடிக்கை எடுப்பேன்" என பதிவிட்டிருந்தார்.

இதையும் படிங்க: அறிமுக டெஸ்டில் அசத்திய நாயகர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.