ETV Bharat / sports

குழந்தைகளுடன் உடற்பயிற்சியைத் தொடங்கிய ஃபீல்டிங் ஜாம்பவான்! - கோவிட்-19 பெருந்தொற்றால்

தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் ஜாம்பவானான ஜான்டி ரோட்ஸ் வீட்டில் தனிமையில் இருக்கும் நேரத்தில், தனது குடும்பத்தினருடன் இணைந்து உடற்பயிற்சிகளை மேற்கொண்டுவருகிறார்.

Combating Corona: Jonty Rhodes enjoys home workout wCombating Corona: Jonty Rhodes enjoys home workout with kidsith kids
Combating Corona: Jonty Rhodes enjoys home workout with kids
author img

By

Published : Mar 30, 2020, 10:14 AM IST

கோவிட்-19 பெருந்தொற்றால் உலக நாடுகள் பல அச்சத்தில் இருந்துவரும் நிலையில், பல நாடுகளும் இதிலிருந்து தப்பிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளன. மேலும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களும் தங்களை சுய தனிமைப்படுத்திக் கொண்டும் வருகின்றனர்.

அந்தவரிசையில் தென் ஆப்பிரிக்க அணியின் ஃபீல்டிங் ஜம்பவானான ஜான்டி ரோட்ஸ் தனது குடும்பத்தினருடன் சுயத் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். இந்நிலையில் ரோட்ஸ், தனது மனைவி, குழந்தைகளுடன் உடற்பயிற்சி மேற்கொள்ளும் காணொலியை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து கூறிய ரோட்ஸ், "தற்போது ஏற்பட்டுள்ள சூழலில் நமது உடல்நலத்தைப் பாதுகாத்துக்கொள்வது இன்றியமையாத ஒன்றாகும். எனவேதான் நான் வீட்டில் எனது குழந்தைகளுடன் ஒரு உடற்பயிற்சி நிலையத்தை உருவாக்கியுள்ளேன்.

இதனால் நாங்கள் எங்கள் உடல்நலனைப் பாதுகாப்பதுடன், நேரத்தையும் உடற்பயிற்சிக்காகச் செலவிட்டுவருகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:வீட்டையே கிரிக்கெட் அரங்காக மாற்றிய பாண்டியா பிரதர்ஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.