ஆஸ்திரேலியாவில் நடப்பு சீசனுக்கான பிக் பாஷ் டி20 லீக் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், நேற்று சிட்னியில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் - சிட்னி சிக்சர்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சிட்னி சிக்சர்ஸ் அணி பிரிஸ்பேன் ஹீட் அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. அதன்படி, பேட்டிங் செய்த பிரிஸ்பேன் ஹீட் அணி இரண்டாவது ஓவரிலேயே தொடக்க வீரர் மேக்ஸ் பிரயன்ட்டின் விக்கெட்டை இழந்தது.
இந்த நிலையில், களமிறங்கிய கிறிஸ் லின் சிட்னி சிக்சர்ஸ் அணியின் பந்துவீச்சை சிக்சர்களாக பறக்கவிட்டு வானவேடிக்கை நிகழ்த்தினார். 35 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர் 11 சிக்சர்கள், நான்கு பவுண்டரிகள் என 94 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால், பிரிஸ்பேன் ஹீட் அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு 209 ரன்களை குவித்தது.
-
💥 Full highlights of Chris Lynn's 35-ball 94 💥
— KFC Big Bash League (@BBL) December 22, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Enjoy! #BBL09 pic.twitter.com/uE62gBLC9D
">💥 Full highlights of Chris Lynn's 35-ball 94 💥
— KFC Big Bash League (@BBL) December 22, 2019
Enjoy! #BBL09 pic.twitter.com/uE62gBLC9D💥 Full highlights of Chris Lynn's 35-ball 94 💥
— KFC Big Bash League (@BBL) December 22, 2019
Enjoy! #BBL09 pic.twitter.com/uE62gBLC9D
கிறிஸ் லின் இப்போட்டியில் 94 ரன்கள் எடுத்ததன் மூலம், பிக் பாஷ் டி20 தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் மைக்கில் கிளங்கரின் (1947 ரன்கள்) சாதனையை முறியடித்து 2054 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். இதைத்தொடர்ந்து, 210 ரன்கள் இலக்குடன் விளையாடிய சிட்னி சிக்சர்ஸ் அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகள் இழப்புக்கு 161 ரன்கள் மட்டுமே எடுத்தது.
-
9⃣4⃣ from 3⃣5⃣ including 1⃣1⃣ massive sixes. Lynnsanity at SCG 😱
— Mumbai Indians (@mipaltan) December 22, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Who's excited to watch this man bat in the MI blue & gold?#LynnSixWatch #BBL09 #OneFamily @lynny50 pic.twitter.com/0uzHWFjbqh
">9⃣4⃣ from 3⃣5⃣ including 1⃣1⃣ massive sixes. Lynnsanity at SCG 😱
— Mumbai Indians (@mipaltan) December 22, 2019
Who's excited to watch this man bat in the MI blue & gold?#LynnSixWatch #BBL09 #OneFamily @lynny50 pic.twitter.com/0uzHWFjbqh9⃣4⃣ from 3⃣5⃣ including 1⃣1⃣ massive sixes. Lynnsanity at SCG 😱
— Mumbai Indians (@mipaltan) December 22, 2019
Who's excited to watch this man bat in the MI blue & gold?#LynnSixWatch #BBL09 #OneFamily @lynny50 pic.twitter.com/0uzHWFjbqh
சிட்னி சிக்சர்ஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக ஜேம்ஸ் வின்ஸ் 39 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், பிரிஸ்பேன் ஹீட் அணி இப்போட்டியில் 48 ரன்கள் வித்தியாசத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணியை வீழ்த்தியது. இப்போட்டியில் 11 சிக்சர்களை பறக்கவிட்ட கிறிஸ் லின், அடுத்து நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு விளையாட ஒப்பந்தமாகினார்.