கிரிக்கெட்டில் சிக்சர் மன்னன், யுனிவர்சல் பாஸ் என்றழைக்கப்படுவர் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில். 1999இல் கிரிக்கெட்டுக்கு அறிமுகமான இவர், 2019இல் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்றுவரும் மூன்றாவது ஒருநாள் போட்டியுடன் ஓய்வுபெறவுள்ளார். இப்போட்டியில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி, அந்த அணி 22 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களை எடுத்திருந்தபோது, மழை குறிக்கட்டதால் ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தனது கடைசி போட்டியில் விளையாடிய கெயில், 42 பந்துகளில் 8 பவுண்ட்ரி, 5 சிக்சர் என 72 ரன்களுடன் ஆட்டமிழந்தார். இப்போட்டியில், இவர் ஐந்து சிக்சர்களை அடித்ததன்மூலம், நடப்பு ஆண்டில் 56 சிக்சர்களை பறக்கவிட்டுள்ளார். இதன்மூலம், ஒரே ஆண்டில் அதிக சிக்சர்கள் அடித்த தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் டி வில்லியர்ஸின் சாதனையை (58) முறியடிக்க தவறியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 301 போட்டிகளில் விளையாடியுள்ள 10, 552 ரன்களை குவித்துள்ளார்.
ஒரே ஆண்டில் அதிக சிக்சர்களை அடித்த வீரர்கள் பட்டியல்
- டி வில்லியர்ஸ் (தென்னாப்பிரிக்கா 2015) - 58
- கிறிஸ் கெயில் (வெஸ்ட் இண்டீஸ், 2019) - 56
- அஃப்ரிடி (பாகிஸ்தான், 2002) - 48
- ரோகித் ஷர்மா (இந்தியா, 2017) - 46