பிப்ரவரி 24, 25 ஆகிய தேதிகளில் அரசு முறை பயணமாக இந்தியா வரவுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், குஜராத்தின் அகமதாபாத்திலுள்ள மொடீரா கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைக்கவுள்ளார். இந்த மொடீரா மைதனத்திற்கு பல்வேறு சிறப்புகள் உள்ளன.
குஜராத்தின் அகமதாபாத்தில் ரூ.800 கோடி மதிப்பில் மொடீரா கிரிக்கெட் மைதானம் விஸ்திரிக்கும் வகையில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒரு லட்சத்து 10 ஆயிரம் இருக்கைகளைக் கொண்டு தயராகியுள்ள இந்த மைதானம், உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானம் என்ற பெயரை பெற்றுள்ளது.
-
The Sun is out! 🌞#MoteraStadium
— BCCI (@BCCI) February 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Ahmedabad, India 🇮🇳 pic.twitter.com/JYAC886Bd4
">The Sun is out! 🌞#MoteraStadium
— BCCI (@BCCI) February 19, 2020
Ahmedabad, India 🇮🇳 pic.twitter.com/JYAC886Bd4The Sun is out! 🌞#MoteraStadium
— BCCI (@BCCI) February 19, 2020
Ahmedabad, India 🇮🇳 pic.twitter.com/JYAC886Bd4
இதனை, வரும் பிப்ரவரி 24, 25 ஆகிய தேதிகளில் அரசு முறை பயணமாக இந்தியா வரவுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திறந்த வைக்கவுள்ளார். பிராமண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த மைதானத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில், இந்த மைதானத்தை நேரில் பார்ப்பதற்காக தான் பிப்ரவரி 24ஆம் தேதியை எதிர்நோக்கி காத்திருப்பதாக பிசிசிஐ தலைவர் கங்குலி ட்வீட் செய்துள்ளார். அகமதாபாத்தில் இந்த மைதானத்தை பார்க்க அழகாகவுள்ளது. ஒரு வீரராகவும், கேப்டனாகவும் எனக்கு இந்த மைதானத்தில் ஏராளமான நினைவுகள் உள்ளன. இனி இந்தியாவின் மிகப்பெரிய மைதானமான ஈடன் கார்டன் மைதானம் இருக்காது எனவும் குறிப்பிட்டிருந்தார்.
மொடீரா மைதானம் புதுபிக்கப்படுவதற்கு முன்பாக 64,000 இருக்கைகள் கொண்ட ஈடன் கார்டன் மைதானமே இந்தியாவின் மிகப்பெரிய மைதானமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:உலகில் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமான மொடீராவின் சிறப்புகள்!