ETV Bharat / sports

'பிரிஸ்பேன் டெஸ்ட்டில் பும்ரா இல்லாதது பின்னடைவே' - இர்ஃபான் பதான்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியிலிருந்து வேகப்பந்துவீச்சாளர் பும்ரா விலகியது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார்.

Bumrah crucial for Gabba, can adjust length more easily than others

author img

By

Published : Jan 14, 2021, 9:06 AM IST

Updated : Jan 14, 2021, 9:28 AM IST

பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை பிரிஸ்பேனில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணிகளும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக இத்தொடரில் நடைபெற்ற மூன்ற டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் ஆஸ்திரேலியாவும், ஒரு போட்டியில் இந்திய அணியும், ஒரு போட்டி டிராவிலும் முடிவடைந்துள்ளது. இதனால் தொடரை வெல்வது யார் என தீர்மானிக்கும் போட்டியாக பிரிஸ்பேன் டெஸ்ட் உள்ளதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் காயம் காரணமாக நான்காவது டெஸ்ட் போட்டியிலிருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விலகியுள்ளது அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய இர்ஃபான் பதான், "நாளை நடைபெறவுள்ள போட்டியில் பேட்மேன்களுக்கு வேகப்பந்துவீச்சாளர்களை சமாளிப்பது சற்று கடினமான ஒன்றுதான். இச்சயமத்தில் இந்திய அணியில் பும்ரா இருந்திருந்தால், அது பெரும் பலனாக அமைந்திருக்கும்.

ஏனெனில் பிரிஸ்பேன், பெர்த் போன்ற மைதானங்களில் பும்ராவின் பந்துவீச்சு பேட்மேன்களுக்கும் பெரும் சவாலாக அமைந்திருக்கும். ஆனால் தற்போதுள்ள இந்திய வேகப்பந்துவீச்சாளர்களால் அதனை செய்யமுடியுமா என்பது கேள்விகுறிதான். இதனால் நாளையப் போட்டியில் பும்ரா இல்லாதது நிச்சயம் இந்திய அணிக்கு பின்னடைவு தான்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ‘பிரிஸ்பேன் டெஸ்டில் புகோவ்ஸ்கி இடம்பெற மாட்டார்’ - ஜஸ்டீன் லங்கர்

Last Updated : Jan 14, 2021, 9:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.