பிரபல ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா, இந்திய அணி, டெஸ்ட் போட்டிகள், ஸ்டீவ் ஸ்மித் ஆட்டம் பற்றி பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
அதில், 'விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நிச்சயம் அனைத்து ஐசிசி தொடர்களையும் வெல்வதற்கு தகுதியான அணி. நிச்சயம் வெல்வார்கள் என எதிர்பார்க்கிறேன். தற்போதுள்ள இந்திய அணியை வீழ்த்துவது தான் அனைத்து நாட்டு கிரிக்கெட் வீரர்களின் குறிக்கோளாக உள்ளது. அதற்காகவே இந்திய அணியையும், கிரிக்கெட் வாரியத்தையும் பாராட்ட வேண்டும்.

டெஸ்ட் போட்டிகளில் லாராவின் 400 ரன்கள் சாதனையை யார் முறியடிப்பார்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு, கோலி, ரோஹித் சர்மா, வார்னர் ஆகியோர் முறியடிக்க வாய்ப்புள்ளது. அந்த வாய்ப்பு ஸ்டீவ் ஸ்மித்திற்கு இல்லை. ஏனென்றால், அவர் என்றும் அட்டாக்கிங் கிரிக்கெட்டை ஆடவில்லை. ஆனால் மற்ற மூவரும் அந்த சாதனையை தகர்க்க வாய்ப்புள்ளது' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: காயத்தால் தகர்ந்த ஒலிம்பிக் கனவு... 28 வயதில் ஓய்வை அறிவித்த நட்சத்திர வீராங்கனை