ETV Bharat / sports

பிபிஎல்: மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது சிட்னி சிக்சர்ஸ்! - பிக் பேஷ் டி20

பிக் பேஷ் டி20 கிரிக்கெட் 10ஆவது சீசனில் நேற்று (பிப்.06) நடைபெற்ற இறுதி போட்டியில் சிட்னி சிக்சர்ஸ் அணி வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி சாதனைப்படைத்தது.

Big Bash League: Sydney Sixers beat Perth Scorchers by 27 runs to defend the title

author img

By

Published : Feb 7, 2021, 2:47 PM IST

ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி20 தொடரான பிக் பேஷ் லீக்கின் 10ஆவது சீசன் கோலாகலமாக நடைபெற்றது. இதில், நேற்று (பிப்.6) நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணி, பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஸ்கார்ச்சர்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய சிட்னி சிக்சர்ஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் அதிரடி வீரர் ஜோஷ் பிலீப் 9 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்குத் திரும்பினார். இருப்பினும் மறுமுனையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜேம்ஸ் வின்ஸ், எதிரணியின் பந்துவீச்சை பவுண்டரிகளாக மாற்றி அரைசதம் கடந்தார்.

தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய வின்ஸ், சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 95 ரன்களில் ஆட்டமிழந்து, சதமடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார். பின்னர் வந்த வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்து தடுமாறினர்.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் சிட்னி சிக்சர்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களை எடுத்தது. எதிரணி தரப்பில் ரிச்சர்ட்சன், ஆண்ட்ரூ டை ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதையடுத்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்கு கேமரூன், லிவிங்ஸ்டோன் இணை அபார தொடக்கத்தைத் தந்து, அணியின் ஸ்கோரை உயர்த்தியது. பின்னர் கேமரூன் 30 ரன்களிலும், லிவிங்ஸ்டோன் 45 ரன்களில் பேர்டிடம் விக்கெட்டை இழந்தனர்.

அதன்பின் வந்த வீரர்களும் எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்ததால், பெர்த் அணியின் தோல்வி ஏறத்தாழ உறுதிசெய்யப்பட்டது. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் பெர்த் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் சிட்னி சிக்சர்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியை வீழ்த்தி, மூன்றாவது முறையாக பிக் பேஷ் டி20 தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்று சாதித்தது. இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய ஜேம்ஸ் வின்ஸ் ஆட்டநாயகனாகவும், தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோஷ் பிலீப் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

இதையும் படிங்க:‘கிரிக்கெட் வீரர்களும் மனிதர்கள்தான், அவர்களுக்கும் ஓய்வு தேவை’ - ரவி சாஸ்திரி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.