இந்திய கிரிக்கெட் வரலாற்றின் தவிர்க்க முடியாத வீரர்களில் யுவராஜ் சிங்கும் ஒருவர். 2007ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையின்போதும், 2011ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஒவர் உலக கோப்பையின்போதும் இந்தியா கோப்பை வெல்ல யுவராஜின் பங்கு முக்கியமானது.
யுவராஜ் சிங் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன் பின் ஐபிஎல் மற்றும் மற்ற டி20 லீக் போட்டிகளில் கலந்துகொண்டுவந்தார்.
இந்நிலையில், அவர் மீண்டும் பஞ்சாப் அணிக்காக உள்ளூர் போட்டிகளில் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியானது. இந்தச் செய்தி அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும் யுவராஜ் சிங் மீண்டும் உள்ளூர் போட்டிகளில் விளையாட பிசிசிஐ விதிகள் அனுமதிக்காது என்று ரீதியில் தகவல் பரவின.
இது குறித்து பிசிசிஐ சேர்ந்த ஒருவர் கூறுகையில், "யுவராஜ் சிங் ஒய்வு பெற்றவுடன் அவருக்கு குறிப்பிட்ட தொகை (One time benefit) வழங்கப்பட்டது. அசன் பின் அவருக்கு ஓய்வு ஊதியம் வழங்கப்பட்டுவருகிறது. எனவே, அவர் மீண்டும் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவாரானால் அது குறித்து பிசிசிஐ இறுதி முடிவு எடுக்கும்.
இருப்பினும், அவர் பஞ்சாப் அணிக்காக விளையாடினால் அது பஞ்சாப் அணியைச் சேர்ந்த இளைஞர்களுக்கு பெரிய அனுபவமாக இருக்கும்" என்றார். யுவராஜ் சிங் ஏற்கனவே தனது விருப்பத்தை பிசிசிஐ தலைவர் கங்குலியிடம் தெரியப்படுத்திவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: 23 ஆண்டுகால ஆஸி. பகைக்கு முற்றுப்புள்ளி - இந்திய ரசிகர்கள் மறக்க முடியாத மகத்தான நாள்!