ETV Bharat / sports

ஜடேஜாவுக்கு மறுப்பு... புஜாரா, சாஹாவுக்கு அனுமதி!

author img

By

Published : Mar 6, 2020, 12:13 PM IST

2019-20ஆம் ஆண்டுக்கான ரஞ்சி டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் ஆடுவதற்கு ஜடேஜாவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் புஜாரா, சாஹா ஆகியோருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

bcci-president-sourav-ganguly-denies-ravindra-jadeja-permission-to-play-ranji-final

2019-20ஆம் ஆண்டுக்கான ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் இறுதிப் போட்டிக்கு செளராஷ்டிரா - பெங்கால் அணிகள் முன்னேறியுள்ளன. இந்தப் போட்டி மார்ச் 9ஆம் தேதி தொடங்கவுள்ளது.

இரு அணிகளும் ரஞ்சி டிராபி கோப்பையை கைப்பற்றுவதற்கு தீவிரமாக முயற்சித்து வரும் நிலையில், ரஞ்சி டிராபி தொடரில் இந்திய வீரர்களான புஜாரா, சாஹா, ஜடேஜா ஆகியோரை பங்கேற்க வைப்பதில் இரு அணிகளும் தீவிரம் காட்டியுள்ளன.

புஜாரா
புஜாரா

ஆனால் ரஞ்சி டிராபி இறுதிப்போட்டியின்போது தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர் மார்ச் 12ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதனால் இந்திய வீரர்கள் பங்கேற்க பிசிசிஐயிடம் அனுமதி கேட்கப்பட்டது. அதில் புஜாரா, ஜடேஜா ஆகியோர் செளராஷ்டிரா அணிக்கும் சாஹா பெங்கால் அணிக்கும் ஆடவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதுகுறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி, ஜடேஜாவை தவிர்த்து மற்ற வீரர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஜடேஜா பங்கேற்க உள்ளதால் ரஞ்சி டிராபி தொடரில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை என காரணம் கூறப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை பற்றி முன்னாள் செளராஷ்டிரா கேப்டன் ஷா பேசுகையில், '' ரஞ்சி டிராபி தொடரின் முக்கியப் போட்டிகளின்போது பிசிசிஐ சர்வதேச போட்டிகளை நடத்தக்கூடாது. இதுவே ஐபிஎல் தொடர் நடந்தால் பிசிசிஐ சர்வதேச போட்டிகள் நடத்த அனுமதியளிக்குமா? ஏனென்றால் ஐபிஎல்லில் அதிகமாக பணம் புரளுகிறது. ரஞ்சி டிராபி தொடரால் வருவாய் எதுவும் இல்லை.

சஹா
சஹா

நட்சத்திர வீரர்கள் உள்ளூர் தொடரில் பங்கேற்றால்தான் முதல்தர போட்டிகளும் முக்கியத்துவம் பெறும். இதனை எதிர்காலத்தில் பரீசிலிக்கவேண்டும். செளராஷ்டிரா அணிக்காக ஜடேஜா ஆடுவதோடு, பெங்கால் அணிக்காக முகமது ஷமியும் ஆடவேண்டும் என்பதுதான் எனது கருத்து'' என்றார்.

இதையும் படிங்க: தேர்வுக் குழுவினருக்கான நேர்காணலில் தோனியின் எதிர்காலம் குறித்த கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.