ஐசிசி சார்பில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் 2010ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் இதன் ஆறாவது டி20 உலகக்கோப்பை தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
இதில், இந்திய அணி குரூப் ஏ பிரிவில் இடம்பெற்று, நான்கு போட்டிகளில் (ஆஸ்திரேலியா, வங்கதேசம், நியூசிலாந்து, இலங்கை) வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. இதைத்தொடர்ந்து, சிட்னியில் இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையே நடைபெறவிருந்த அரையிறுதிப் போட்டி மழையால் ரத்தானது.
இதனால், புள்ளிகள் அடிப்படையில் இந்திய அணி குரூப் ஏ பிரிவுகளில் முதலிடம் பிடித்ததால், இந்திய அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. மறுமுனையில், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி தென் ஆப்பிரிக்க அணியை ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்குள் தொடர்ந்து ஆறாவது முறையாக நுழைந்தது.
-
Good wishes to the indian women’s cricket team for the finals tomorrow .. They have made the country proud .. @BCCI
— Sourav Ganguly (@SGanguly99) March 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Good wishes to the indian women’s cricket team for the finals tomorrow .. They have made the country proud .. @BCCI
— Sourav Ganguly (@SGanguly99) March 7, 2020Good wishes to the indian women’s cricket team for the finals tomorrow .. They have made the country proud .. @BCCI
— Sourav Ganguly (@SGanguly99) March 7, 2020
இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி நாளை மெல்போர்னில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் விளையாடும் வீராங்கனைங்களுக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான கங்குலி வாழ்த்து கூறி ட்வீட் செய்துள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், ”நாளைய இறுதிப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி சிறப்பாக விளையாட எனது வாழ்த்துகள். இறுதிப் போட்டி வரை முன்னேறி நம் நாட்டிக்கு அவர்கள் பெருமை தேடித் தந்துள்ளனர்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த முறை வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிவரை மட்டுமே சென்ற ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, நாளை இறுதிப் போட்டியில் வெற்றிபெற்று சரித்திரம் படைக்குமா என்பதே இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: மகளிர் டி20 இறுதிப் போட்டிகளும் ஆஸி.யின் ஆதிக்கமும்...!