வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணி, மூன்று ஒருநாள், இரண்டு டி20, ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி வங்கதேசத்தின் சவர் மாநிலத்தில் இன்று தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணியின் கேப்டன் கிரேக் எர்வின் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் விதமாக கெவின் கசுஸா இரண்டு ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் மற்றோரு தொடக்க வீரரான பிரின்ஸ் மஸ்வாரேவுடன் ஜோடி சேர்ந்த கிரேக் எர்வின், வங்கதேச அணியின் பந்துவீச்சை பதம்பார்க்கத் தொடங்கினார்.
-
Craig Ervine and Sikandar Raza will resume proceedings for Zimbabwe after the tea break.
— ICC (@ICC) February 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
The visitors are in an advantageous position at the moment. Can Bangladesh turn the tide in the final session?#BANvZIM pic.twitter.com/AwS5xieTfq
">Craig Ervine and Sikandar Raza will resume proceedings for Zimbabwe after the tea break.
— ICC (@ICC) February 22, 2020
The visitors are in an advantageous position at the moment. Can Bangladesh turn the tide in the final session?#BANvZIM pic.twitter.com/AwS5xieTfqCraig Ervine and Sikandar Raza will resume proceedings for Zimbabwe after the tea break.
— ICC (@ICC) February 22, 2020
The visitors are in an advantageous position at the moment. Can Bangladesh turn the tide in the final session?#BANvZIM pic.twitter.com/AwS5xieTfq
மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த மஸ்வரே, 64 ரன்கள் அடித்திருந்த நிலையில் நயீம் வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினர். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய அனுபவ வீரரான பிரண்டன் டெய்லரும் 10 ரன்களில் வெளியேற, ஆட்டம் வங்கதேச அணியின் பக்கம் திரும்பியது.
இருப்பினும் தனது அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்த கேப்டன் கிரேன் எர்வின், சர்வதேச டெஸ்ட் போட்டியில் தனது மூன்றாவது சதத்தைப் பதிவு செய்து அசத்தினார். பின்னர் 107 ரன்கள் அடித்த எர்வின் நயீம் பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார்.
-
Nayeem Hasan provides the breakthrough, catching Prince Masvaure off his own bowling to end a 111-run stand for the second wicket. A fine knock, though!#WIvSL pic.twitter.com/GD1MGaqfly
— ICC (@ICC) February 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Nayeem Hasan provides the breakthrough, catching Prince Masvaure off his own bowling to end a 111-run stand for the second wicket. A fine knock, though!#WIvSL pic.twitter.com/GD1MGaqfly
— ICC (@ICC) February 22, 2020Nayeem Hasan provides the breakthrough, catching Prince Masvaure off his own bowling to end a 111-run stand for the second wicket. A fine knock, though!#WIvSL pic.twitter.com/GD1MGaqfly
— ICC (@ICC) February 22, 2020
இதன்மூலம் ஜிம்பாப்வே அணி தனது முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 228 ரன்களை எடுத்தது. அந்த அணியில் ரெஜிஸ் சகாப்வா ஒன்பது ரன்களுடனும், டொனால்ட் டிரிபனோ ரன் ஏதுமின்றியும் இரண்டாம் நாள் ஆட்டத்தைத் தொடரவுள்ளனர். வங்கதேச அணி சார்பில் நயீம் ஹசன் நான்கு விக்கெட்டுகளையும், அபு ஜெயித் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
இதையும் படிங்க: மகளிர் டி20 உலகக்கோப்பை: கத்துக்குட்டி தாய்லாந்தை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ்!