ETV Bharat / sports

#INDvsBAN: போட்டியைக் காண நேரில் வரும் பிரதமர் - உற்சாகத்தில் ரசிகர்கள்!

இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியை வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா தொடங்கிவைப்பார் என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

Saurav Ganguly on Ind Vs Ban match
author img

By

Published : Oct 22, 2019, 2:11 PM IST

INDvsBAN: இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான தொடர் வருகிற நவம்பர் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளது. இதில் மூன்று டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடராக நடைபெறவுள்ளது. இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இத்தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியானது கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் பிசிசிஐ தலைவரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி இன்று செய்தியாளர்களைச் சந்திக்கையில், வங்கதேச நாட்டின் பிரதமர் ஷேக் ஹசினா ஈடன் கார்டனில் நடைபெறவுள்ள இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியை மணியடித்து தொடங்கிவைக்கவுள்ளார் என்று தெரிவித்தார்.

  • Sourav Ganguly:Bangladesh PM Sheikh Hasina has confirmed her presence on first day of 2nd Test match between India&Bangladesh at Eden Gardens.If all goes as planned, she will ring the bell at stadium to signal start of the game. Will also send invitation to PM Modi&West Bengal CM pic.twitter.com/8I65M9OU2g

    — ANI (@ANI) October 22, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மேலும், இந்த போட்டியைக் காண பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோருக்கும் அழைப்புகள் விடுக்கப்படும் எனவும் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

நேற்று வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் அந்நாட்டின் கிரிக்கெட் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் புறக்கணித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பதினால் இந்தியாவுடனான தொடரில் பங்கேற்குமா என்ற எண்ணம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதையும் படிங்க: வலுக்கும் எதிர்ப்புகள்; இக்கட்டான சூழ்நிலையில் வங்கதேச அணி - ரத்தாகிறதா இந்தியாவுடனான தொடர்?

Intro:Body:

Saurav Ganguly on Ind Vs Ban match 

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.