வெஸ்ட் இண்டீஸ் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. பிப்ரவரி 3ஆம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி விளையாடிய வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 430 ரன்னும், வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்ஸில் 259 ரன்னும் எடுத்தன. பின்னர் 171 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸை விளையாடிய வங்கதேச அணி 8 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது.
-
What a scorecard. What a win 🔥@windiescricket | #BANvWI pic.twitter.com/R6605H9tSu
— ICC (@ICC) February 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">What a scorecard. What a win 🔥@windiescricket | #BANvWI pic.twitter.com/R6605H9tSu
— ICC (@ICC) February 7, 2021What a scorecard. What a win 🔥@windiescricket | #BANvWI pic.twitter.com/R6605H9tSu
— ICC (@ICC) February 7, 2021
அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் மொமினுல் ஹக் 115 ரன்களும், லிட்டன் தாஸ் 69 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வெற்றி இலக்காக 370 ரன்களை வங்கதேச அணி நிர்ணயித்தது.
பின்னர் இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்கள் பிராத்வெயிட், காம்பெல், மோஸ்லே ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த அறிமுக வீரர் கெய்ல் மேயர்ஸ் - நிக்ருமா போனர் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தத் தொடங்கியது.
-
History created today 🔥
— ICC (@ICC) February 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
210 on debut for Mayers leading @windiescricket
to an extraordinary three-wicket victory over Bangladesh.#BANvWI | #WTC21 pic.twitter.com/wUBB3PMRsk
">History created today 🔥
— ICC (@ICC) February 7, 2021
210 on debut for Mayers leading @windiescricket
to an extraordinary three-wicket victory over Bangladesh.#BANvWI | #WTC21 pic.twitter.com/wUBB3PMRskHistory created today 🔥
— ICC (@ICC) February 7, 2021
210 on debut for Mayers leading @windiescricket
to an extraordinary three-wicket victory over Bangladesh.#BANvWI | #WTC21 pic.twitter.com/wUBB3PMRsk
இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கெய்ல் மேயர்ஸ், எதிரணியின் பந்துவீச்சை பவுண்டரிகளுக்கு பறக்கவிட்டு, தனது அறிமுக போட்டியிலேயே இரட்டை சதத்தைப் பதிவு செய்து அசத்தினார். இறுதிவரை களத்திலிருந்த மேயர்ஸ் வெஸ்ட் அணிக்கு வெற்றியையும் தேடித்தந்தார்.
-
A double century on Test debut for Kyle Mayers!
— ICC (@ICC) February 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
It's helped put West Indies on the verge of a historic win against Bangladesh 😲#BANvWI | https://t.co/OYKP4vYfsj pic.twitter.com/hakWC3iqSx
">A double century on Test debut for Kyle Mayers!
— ICC (@ICC) February 7, 2021
It's helped put West Indies on the verge of a historic win against Bangladesh 😲#BANvWI | https://t.co/OYKP4vYfsj pic.twitter.com/hakWC3iqSxA double century on Test debut for Kyle Mayers!
— ICC (@ICC) February 7, 2021
It's helped put West Indies on the verge of a historic win against Bangladesh 😲#BANvWI | https://t.co/OYKP4vYfsj pic.twitter.com/hakWC3iqSx
இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இப்போட்டியில் இரட்டை சதமடித்து அணிக்கு வெற்றியைப் பெற்றுத்தந்த கெய்ல் மேயர்ஸ் ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார்.
கெய்ல் மேயர்ஸ் தனது அறிமுக போட்டியிலேயே இரட்டை சதம் விளாசியதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அறிமுக போட்டியிலேயே இரட்டை சதமடித்த 6ஆவது வீரர் என்ற பெருமையையும், இரண்டாவது இன்னிங்ஸில் இரட்டை சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
இதையும் படிங்க: அதிகப்பட்சம் 200 தானா... டெஸ்ட் போட்டியின் டிக்கெட் விலை அறிவிப்பு!