ஆஸ்திரேலியாவில் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் இன்று தொடங்கியது. இந்தத் தொடரில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சிட்னி ஷோ கிரவுண்ட் மைதானத்தில் இன்று நடைபெற்றுவரும் முதல் போட்டியில் 'குரூப் ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து விளையாடி வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. ஸ்மிருதி மந்தனா, கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவுர், இளம் வீராங்கனை ஷஃபாலி வர்மா உள்ளிட்ட நட்சத்திர வீராங்கனைகளைக் கொண்ட இந்திய மகளிர் அணி வெற்றியுடன் தொடரைத் தொடங்குமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
-
Australia have won the toss and chosen to bowl at the Sydney Showground!
— T20 World Cup (@T20WorldCup) February 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Good decision? 🤔#AUSvIND | #T20WorldCup pic.twitter.com/3A5Ngbxy6X
">Australia have won the toss and chosen to bowl at the Sydney Showground!
— T20 World Cup (@T20WorldCup) February 21, 2020
Good decision? 🤔#AUSvIND | #T20WorldCup pic.twitter.com/3A5Ngbxy6XAustralia have won the toss and chosen to bowl at the Sydney Showground!
— T20 World Cup (@T20WorldCup) February 21, 2020
Good decision? 🤔#AUSvIND | #T20WorldCup pic.twitter.com/3A5Ngbxy6X
இந்திய அணி: ஹர்மன் ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, ஜெமிமா ராட்ரிகஸ், தீப்தி ஷர்மா, வேதா கிருஷ்ணமூர்த்தி, ஷீகா பாண்டே, தனியா பாட்டியா, அருந்ததி ரெட்டி, பூனம் யாதவ், ராஜேஸ்வரி ஜெயக்வாத்
ஆஸ்திரேலிய அணி: மெக் லானிங் (கேப்டன்), அலிசா ஹீலி, பெத் மூனி, ஆஷ்லே கார்ட்னர், எல்லிஸ் பெர்ரி, ரேச்சல் ஹைன்ஸ், அனாபெல் சுதர்லாந்து, ஜெஸ் ஜோனசேன், மோலி ஸ்டிரானோ, மேகன் ஷூட், டெலிசா கிம்மின்ஸ்
இதையும் படிங்க: பாத்ரூம் சிங்கர் தோனி - இணையத்தில் வைரலாகும் வீடியோ!