ETV Bharat / sports

நிஜ டான்களிடம் சரண்டரான இந்தியா!

மும்பை: இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தொடக்க வீரர்கள் வார்னர் - பிஞ்ச் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தால் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

Australia Beat India by 10 Wickets in wankhede

author img

By

Published : Jan 14, 2020, 9:54 PM IST

இந்தியாவுக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பிஞ்ச் இந்திய அணியை பேட்டிங் செய்யப் பணித்தார்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 255 ரன்கள் எடுத்தது. இதில் தவான் 74 ரன்களும், ராகுல் 47 ரன்களும் அடித்தனர். இதையடுத்து 256 ரன்கள் என்ற எளிய இலக்குடன் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான பிஞ்ச் - வார்னர் களமிறங்கினர்.

ஃபின்ச்
ஃபின்ச்

இந்த இணை தொடக்கம் முதலே அதிரடியாக ஆடத் தொடங்கினர். இவர்களைப் பிரிக்க கேப்டன் விராட் கோலி அனைத்து பந்துவீச்சாளர்களையும் மாற்றி மாற்றி பந்துவீசச் சொல்லியும் பலன் கிடைக்கவில்லை. இந்த இணையின் அதிவேக ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி 18 ஓவர்களில் 120 ரன்களைக் கடந்தது. இதையடுத்து டாப் கியருக்கு மாறிய ஆஸ்திரேலியன் அணியின் பேட்டிங்கை இந்திய அணி பந்துவீச்சாளர்கள் சிறிதும் அச்சுறுத்தாமல் பந்துவீசினர்.

30ஆவது ஓவரின்போது வார்னர் ஒருநாள் போட்டிகளில் தனது 18ஆவது சதத்தைப் பூர்த்தி செய்து ட்ரேட்மார்க் கொண்டாட்டத்தில் ஈடுபட, இந்திய ரசிகர்கள் சத்தம் மைதானத்தில் அமைதியானது. இதேபோல் மறுமுனையில் கேப்டன் பிஞ்சும் தன் பங்கிற்கு ஃபார்மிற்கு வந்துவிட்டேன் பாரு என தனது 16ஆவது சதத்தை விளாச, இந்திய அணியின் தோல்வி உறுதியாகியது.

வார்னர்
வார்னர்

இறுதியாக 37.4 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டியது. உலகக்கோப்பைத் தொடருக்கு பின் ஒருநாள் போட்டிகளிலேயே ஆடாத ஆஸ்திரேலிய அணி, பல மாதங்களுக்கு பின் ஆடிய இந்தப் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது. போட்டியின் முடிவில் வார்னர் 128 ரன்களும், பிஞ்ச் 110 ரன்களும் எடுத்தனர். மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இதையும் படிங்க: கோலி சிறந்த வீரர்தான்... ஆனால் ரோஹித்தின் பேட்டிங் வேற லெவல்' - பாக் வீரர்

Intro:Body:

Australia Beat India by 10 Wickets

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.