டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 19ஆம் தேதி முதல் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஐந்தாவது லீக் போட்டியில், அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, மதுரை பாந்தர்ஸ் அணியை எதிர்கொண்டது.
இதில் முதலில் ஆடிய திண்டுக்கல் அணி அபாரமாக 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்களை குவித்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய மதுரை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அச்சமயத்தில் ஆட்டத்தின் இறுதி ஓவரில் மதுரை அணியின் வெற்றிக்கு 30 ரன்கள் தேவை என்ற நிலையில் அஸ்வின் அந்த ஓவரை வீசினார்.
அப்போது ஐந்தாவது பந்தை வீசிய போது அஸ்வின் பந்தை பின் பக்கம் மறைத்து வைத்துக்கொண்டவாறு ஓடி வந்து குழந்தையை போன்று பந்தை வீசினார். அந்த பந்தை பேட்ஸ்மேன் லாங்-ஆன் திசையில் தூக்கி அடிக்கவே அங்கிருந்த ஃபீல்டர் அதை எளிதாக பிடித்தார்.
-
My experiments with the ball - Ft. @ashwinravi99!
— TNPL (@TNPremierLeague) July 23, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
What would you name this delivery?!#TNPL2019 #NammaPasangaNammaGethu pic.twitter.com/bHEgXY51ZU
">My experiments with the ball - Ft. @ashwinravi99!
— TNPL (@TNPremierLeague) July 23, 2019
What would you name this delivery?!#TNPL2019 #NammaPasangaNammaGethu pic.twitter.com/bHEgXY51ZUMy experiments with the ball - Ft. @ashwinravi99!
— TNPL (@TNPremierLeague) July 23, 2019
What would you name this delivery?!#TNPL2019 #NammaPasangaNammaGethu pic.twitter.com/bHEgXY51ZU
இறுதியில் மதுரை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்ததால், 30 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸிடம் வீழ்ந்தது. இந்த வெற்றியின் மூலம் திண்டுக்கல் அணி முதலிடத்துக்கு முன்னேறியது.
அஸ்வினின் இந்த பந்துவீச்சை டிஎன்பிஎல் கிரிக்கெட் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டனர். அதைத் தொடர்ந்து ரசிகர்கள் அஸ்வினின் இந்த பந்துவீச்சை கலாய்த்தும் கண்டித்தும் கருத்துகள் பதிவிட்டனர். இந்த தொடாரின் முதல் போட்டியிலும் அஸ்வின் இதே போன்று தெருவில் கிரிக்கெட் ஆடுபவர்களைப் போன்று பந்துவீசியதை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வறுத்தெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.