விளையாட்டுப் பிரபலங்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் தனது ரசிர்களுக்காக சில மணி நேரங்கள் ஒதுக்கி ட்விட்டரில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்தவகையில், இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் #askash என்ற ஹேஸ்டேக்கை பயன்படுத்தி தன்னிடம் கேள்வி கேட்கலாம் என்று பதிவிட்டிருந்தார்.
அந்த ஹேஸ்டேக்கை பயன்படுத்தி அவரது மனைவி பிரீத்தி அஸ்வின், ‘திருமண நாள் திட்டம் என்ன என்பதை இப்போதே சொல்லுங்கள்!’ என்று கேட்டிருந்தார். மேலும், 'அவர் அவர் பிரச்னை அவர் அவருக்கு' என்ற ஹேஸ்டேக்கை பிரீத்தி அஸ்வின் பயன்படுத்தியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கவில்லை என்றால் என்ன நடக்கும் என்பதை நன்கு அறிந்த சமத்து பிள்ளையான அஸ்வின், ‘இந்தூரில் சந்திப்போம்’ என்று இரண்டு ஸ்மைலிகளை பறக்கவிட்டு சமாளித்துள்ளார். யாருக்கு பதில் சொல்லாவிட்டலும் மனைவிக்கு பதில் சொல்லித்தானே ஆக வேண்டும் என்று நெட்டிசன்கள் அஸ்வினை கலாய்த்து வருகின்றனர்.
இதையும் படிங்க: 400ஆவது சிக்சர் அடித்து சாதனைப் படைப்பாரா ஹிட்மேன்!