ETV Bharat / sports

‘அந்த பெயர் எனது ஃபோனில் வந்தபோது என்னைக் கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்!’ - டர்னர்

டெல்லி: இந்தியாவுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு முக்கிய அங்கம் வகித்த டர்னருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இதில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்மித் பாராட்டியதை சுவாரஸ்யத்துடன் பகிர்ந்து கொண்டார்.

congrats
author img

By

Published : Mar 12, 2019, 3:54 PM IST

இந்தியாவுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் 43 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணியை வெற்றி பெறச் செய்ததற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். அதில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்மித், அந்த இன்னிங்ஸ் குறித்து தனக்கு ஃபோன் செய்து பாராட்டியதாக டர்னர் கூறியுள்ளார்.

turner
ashton

இதனை டர்னர், “அந்த ஃபோன் வந்தபோது என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். ஸ்மித்துடன் ஓய்வறையை விரைவில் பகிர்ந்துகொள்ள ஆர்வமாக உள்ளேன்” என அந்த நிமிடங்களை நினைவுக் கூர்ந்துள்ளார்.

அதேபோல் டர்னர் வலைப்பயிற்சியில் ஈடுபட்டபோது முன்னாள் வீரர் மேத்யூ ஹெய்டன் நேரில் பேட்டிங் குறித்து ஆலோசித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக ஸ்மித்துடன் இணைந்து ஆடவுள்ளதை ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும் இளம் வீரர் டர்னர் தெரிவித்துள்ளார்.

Intro:Body:

மாநகராட்சிக்கு பாக்கி வைத்திருக்கும் விஜயகாந்த் 

நடிகர் விஜயகாந்த் சினிமாவில் இருந்த தனது ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்து தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியை 2005ம் ஆண்டு ஆரம்பித்தார். அதற்கான தலைமை அலுவலகம் சென்னை கோயம்பேடு அருகே ஜானகிராமன் காலனியில் அமைந்துள்ளது. இந்த அலுவலகம் அமைந்துள்ள பகுதி பகுதி சென்னை மாநகராட்சியின் 10 வது மண்டலம் (கோடம்பாக்கம்) 127 வது வார்டுக்குள் இருக்கிறது. தேமுதிக அலுவலகத்திற்கு கட்ட வேண்டிய குடிநீர் மற்றும் கழிவு நீர் இணைப்பு வரி ரூ. 54 ஆயிரத்தை கட்டாமல் இழுத்தடித்து வந்துள்ளனர். தற்போது இந்த தகவல் வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேமுதிக கடந்த சட்டமன்ற தேர்தலில் பெரும் வெற்றிபெற்று எதிர்க்கட்சியாக உருவெடுத்தது. தற்போதும் தேமுதிகவுக்காக திமுகவும், அதிமுகவும் கூட்டணிக்கு துண்டு விரித்து காத்துக்கிடக்கின்றன. அந்த அளவுக்கு விஜயகாந்தின் கட்சிக்கு மவுசு கூடியுள்ளது. மேலும் கட்சியில் விருப்ப மனுக்கள் 20 ஆயிரம் ரூபாய் என்ற வீதத்தில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கட்சிக்கு என்று சொத்து இருக்கிறது. இந்நிலையில் மாநகராட்சிக்கு கட்ட வேண்டிய வரியை தராமல் இழுத்தடிப்பது எந்த வகையில் நியாயம்? இது மற்றவர்களுக்கும் முன்னுதாரணமாக விளங்கும் என்று பேசிகொண்டே நகர்ந்தனர் அந்த நியாயவான்கள்.      

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.