இந்தியாவில் நடைபெற்றுவரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை பின்பற்றி பல்வேறு நாடுகளும் உள்ளூர் டி20 தொடர்களை நடத்திவருகின்றன. அந்த வரிசையில் வங்கதேசமும் பங்களாதேஷ் பிரீமியர் லீக் என்ற தொடரை நடத்திவருகின்றது.
இந்நிலையில் இத்தொடரின் எட்டாவது சீசன் நேற்று தொடங்கியது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணியான ராஜ்ஷாஹி ராயல்ஸ் (Rajshahi Royals) அணி கேப்டனாக அதிரடி வீரர் ரஸ்ஸலை நியமித்துள்ளது.
கேப்டனாக நியமிக்கப்பட்ட பின் ரஸ்ஸல் கூறுகையில், "எங்களது அணியில் பல்வேறு அனுபவ வீரர்கள் இருந்தபோதிலும் என்னை கேப்டனாக நியமித்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது.
நான் உலகின் பல்வேறு டி20 தொடர்களில் விளையாடிவுள்ளேன். ஆனால் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்பேஷ் லீக்கை விட பங்களாதேஷ் பிரீமியர் லீக் சிறப்பானது" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் இன்று நடக்கவுள்ள பங்களாதேஷ் பிரீமியர் லீக்கின் மூன்றாவது ஆட்டத்தில் ரஸ்ஸல் தலைமையிலான ராஜ்ஷாஹி ராயல்ஸ் அணி, மோர்டசா தலைமையிலான தாக்கா பால்தூன்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஒருநாள் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்ட டெஸ்ட் நட்சத்திரம்!