ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து மகளிர் அணி, மூன்று போட்டிகள் அடங்கிய டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று (செப்.27) நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி, எதிரணியின் பந்துவீச்சைத் சமாளிக்க முடியாமல் அடுத்தது விக்கெட்டுகளை இழந்து 128 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சட்டர்த்வெய்ட் 30 ரன்களை எடுத்திருந்தார். ஆஸ்திரேலியா அணி தரப்பில் டெலிசா கிம்மின்ஸ், ஜார்ஜியா வேர்ஹாம் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய மகளிர் அணி, 16.4 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. அந்த அணியில் ரேச்சல் ஹெய்ன்ஸ் 40 ரன்களையும், அலிஸா ஹீலி 33 ரன்களை எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினர்.
-
🚨 Stat alert 🚨
— ICC (@ICC) September 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Alyssa Healy has surpassed MS Dhoni's record of most dismissals by a wicket-keeper in T20Is 🔥
Healy ▶️ 92
Dhoni ▶️ 91#AUSvNZ pic.twitter.com/7OrqmR0vAo
">🚨 Stat alert 🚨
— ICC (@ICC) September 27, 2020
Alyssa Healy has surpassed MS Dhoni's record of most dismissals by a wicket-keeper in T20Is 🔥
Healy ▶️ 92
Dhoni ▶️ 91#AUSvNZ pic.twitter.com/7OrqmR0vAo🚨 Stat alert 🚨
— ICC (@ICC) September 27, 2020
Alyssa Healy has surpassed MS Dhoni's record of most dismissals by a wicket-keeper in T20Is 🔥
Healy ▶️ 92
Dhoni ▶️ 91#AUSvNZ pic.twitter.com/7OrqmR0vAo
இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்ட அலிசா ஹீலி, இரண்டு கேட்சுகளைப் பிடித்தார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் விக்கெட் கீப்பிங் முறையில் 92ஆவது விக்கெட்டை கைப்பற்றினார்.
மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் விக்கெட் கீப்பிங் முறையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் பட்டியலில் மகேந்திர சிங் தோனியை (91) பின்னுக்குத்தள்ளி அலிஸா ஹீலி (92) முதலிடம் பிடித்தும் சாதனைப் படைத்துள்ளார்.
இதையும் படிங்க:ஐபிஎல் 2020: கேகேஆர் vs எஸ்ஆர்எச் - ஆட்டத்தை மாற்றிய தருணங்கள்!