பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளராக வலம் வந்தவர் சோயப் அக்தர். சில மாதங்களாக இவர் இந்திய வீரர்கள் பற்றி தொடர்ந்து விமர்சனங்கள் வைத்து வந்தார். இந்நிலையில், 2003ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக சச்சினின் ஆட்டத்தைப் பற்றி அக்தர் நினைவுக் கூர்ந்துள்ளார்.
அதில், ''அந்தப் போட்டியில் சச்சின் 98 ரன்களில் ஆட்டமிழந்தது எனக்கு சோகத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் எங்களுக்கு எதிரான அந்த ஆட்டம் மிகவும் ஸ்பெஷல். அன்று அவர் ஆடிய அதிரடியான ஆட்டத்தால் நிச்சயம் சதம் விளாசியிருக்க வேண்டும்.
நிச்சயம் சதம் விளாசுவார் என்று நானும் எதிர்பார்த்தேன். நான் வீசிய பவுண்சர் முன்பு போல் மீண்டும் சிக்சருக்கு செல்லும் என்று தான் நினைத்தேன். ஆனால் அவர் 98 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இப்போது கிரிக்கெட் ஆடும் வீரர்களோடு சச்சின் டெண்டுல்கரை எப்போதும் ஒப்பிடவே கூடாது. ஏனென்றால் மிகவும் கடினமான காலக்கட்டத்தில் சச்சின் மாபெரும் ஜாம்பவான் வீரராக உருவானவர். ஆனால் இப்போதைய கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக உள்ளது.
அதனால் தான் சச்சின் டெண்டுல்கருடன் விராட் கோலியை ஒப்பிடக் கூடாது. இந்த காலக்கட்டத்தில் சச்சின் கிரிக்கெட் ஆடியிருந்தால் 1.30 ரன்களை அடித்திருப்பார்'' என்றார்.
பாகிஸ்தான் அணி வீரர் என்றாலும் அக்தர் எப்போதும் தன்னை சச்சினின் ரசிகராக அடையாளப்படுத்திக் கொண்டு வந்துள்ளார். இந்த சம்பவத்தின் மூலம் அக்தர் மீண்டும் தான் ஒரு சச்சின் ஃபேன் என்பதை உறுதி செய்துள்ளார்.
இதையும் படிங்க: தலைவன் ஒருவனே: சச்சின்... சச்சின்...!