பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக நடைபெற்ற விளையாட்டு வீரர்களுக்கான விருது வழங்கும் விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், சேவாக், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஆகியோர் பங்கேற்றனர். அந்த விழாவின்போது சேவாக், 2004ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனக்கும் அக்தருக்கும் காரசாரமான விவதாம் ஒன்று நடந்தது என குறிப்பிட்டார்.
அந்த சம்பவம் குறித்து பேசிய சேவாக்,
"அந்த டெஸ்ட் போட்டியில் சச்சினுடன் இணைந்து பேட்டிங் செய்திருந்த நான் 200 ரன்களை குவிக்க நெருங்கியிருந்தேன். அப்போது அக்தர் தொடர்ந்து எனக்கு பவுன்சர் பந்துகளை வீசி மனரீதியாக எனது கவனத்தை திசை திருப்ப முயன்றார். ஒவ்வொரு முறையும் அவர் பவுன்சர் பந்துகளை வீசிய பிறகு, அந்த பந்துகளை ஷாட் அடிக்க வேண்டியதுதானே என கமெண்ட் அடித்தார்.
அவர் பவுன்சர் பந்துகளைதவிர வேறு எந்த பந்துகளையும் வீச மாட்டார் என எனக்கு தெரிந்தபிறகு, நான் அக்தரிடம் சச்சின் நான் ஸ்ட்ரைக்கரில்தான் இருக்கிறார், அவரிடம் போய் ஷாட் ஆட சொல்லு என பதில் அளித்தேன். பிறகு அடுத்த ஓவரில் அக்தர் சச்சினுக்கு பவுன்சர் பந்தை வீச, அதை சச்சின் சிக்சருக்கு விளாசினார். அப்போது அக்தரிடம் சச்சின் முன் நீ எப்போதும் குழந்தைதான் என சீண்டியதாக நினைவுக்கூர்ந்தார்.
இந்நிலையில், சேவாக் கூறுவதை போல இப்படி ஒரு சம்பவம் நடைபெறவே இல்லை என அக்தர் மறுத்துள்ளார். மேலும் இப்படி ஒரு கட்டுக்கதையை சேவாக் உருவாக்கியுள்ளார் என்றும் குற்றஞ்சாட்டினார்.
இதையும் படிங்க: சேவாக்கை விட இம்ரான் நாசிர் திறமையானவர்... ஆனால்? - அக்தர்