ETV Bharat / sports

'நீ பெரிய ஆளுதான்பா...' - கோலியைப் பாராட்டிய அப்ரிடி! - விராட் கோலியின் சாதனைகள்

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் அப்ரிடி, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியை பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.

Afridi on Kohli
author img

By

Published : Sep 19, 2019, 9:56 PM IST

Updated : Sep 20, 2019, 8:55 AM IST

இந்திய கிரிக்கெட்டின் அணியின் கேப்டன் கோலி, மூன்று விதமான போட்டிகளிலும் தலைசிறந்த பேட்ஸ்மேனாக திகழ்கிறார். ஒருநாள், டெஸ்ட், டி20 என இரண்டு ஃபார்மெட்டிலும் கோலி 50-க்கும் அதிகமாக பேட்டிங் ஆவரேஜ் வைத்திருந்தார். இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் அவர் ரன் குவிப்பில் தடுமாறியதால், அவரது பேட்டிங் ஆவரேஜ் 50 லிருந்து 49ஆக குறைந்தது. இதைத்தொடர்ந்து, இந்திய - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நடைபெற்றுவருகிறது.

Kohli
கோலி

இதில், முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், நேற்று மொஹாலியில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இதில், 150 ரன்கள் இலக்குடன் பேட்டிங் செய்த இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் கோலி 52 பந்துகளில் நான்கு பவுண்டரிகள், மூன்று சிக்சர்கள் என 72 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

Kohli
ஐசிசி ட்வீட்

இதனால், டி20 போட்டியில் மீண்டும் இவரது பேட்டிங் ஆவரேஜ் 50ஐ தொட்டது. இதன்மூலம், கோலி மீண்டும் மூன்றுவிதமான போட்டிகளிலும் 50-க்கும் மேல் ஆவரேஜ் வைத்துள்ளார் என ஐசிசி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது.

இந்நிலையில், ஐசிசியின் இந்த ட்வீட் குறித்து அப்ரிடி தனது ட்விட்டர் பக்கத்தில், வாழ்த்துகள் கோலி. நீங்கள் உண்மையிலேயே சிறந்த வீரர்தான். இதேபோல பல வெற்றிகளை சந்திக்க நான் வாழ்த்து தெரிவிக்கிறேன். உலகில் இருக்கும் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் உங்களது சிறப்பான ஆட்டத்தால் மகிழ்வியுங்கள் எனப் பதிவிட்டிருந்தார். பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் சமீபத்தில் பல்வேறு இணக்கமற்ற சூழல் இருந்துவந்தாலும், அப்ரிடியின் பாராட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மீது மரியாதையை வரவழைத்துள்ளது.

இதையும் படிங்க: #INDvSA: மீண்டும் மொகாலியில் கோலியின் கிளாசிக் ஃபினிஷ்!

Intro:Body:

cricket

Conclusion:
Last Updated : Sep 20, 2019, 8:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.