ETV Bharat / sports

ரஷித் கானின் கேப்டன் அவதாரம் - வங்கதேசத்தில் சாதிக்குமா ஆப்கானிஸ்தான்?

author img

By

Published : Aug 20, 2019, 8:39 PM IST

காபுல்: வங்கதேச அணிக்கு எதிராக ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் மற்றும் முத்தரப்பு டி20 தொடரில் பங்கேற்கவுள்ள ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

rashid khan

உலகக்கோப்பை தொடரில் பங்கேற்ற ஆப்கானிஸ்தான் அணி, ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்யாமல் தொடரில் கடைசி இடம் பிடித்தது. இதையடுத்து அந்த அணியின் அனைத்துவிதமான போட்டிகளுக்கும் இளம் வீரர் ரஷித் கான் கேப்டனாக செயல்படுவார் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணி அடுத்ததாக வங்கதேச அணிக்கு எதிரான ஒரே போட்டி கொண்ட டெஸ்ட் தொடரிலும், ஜிம்பாவே, வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிரான முத்தரப்பு தொடரிலும் பங்கேற்க உள்ளது.

இந்த தொடர்களுக்கான ஆப்கானிஸ்தான் அணியின் பட்டியலை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று வெளியிட்டது. அதன்படி முன்பு தெரிவிக்கப்பட்டது போன்று இளம் வீரர் ரஷித் கான் தலைமையில் ஆப்கானிஸ்தான் அணி இரண்டு தொடர்களையும் விளையாடவுள்ளது. இளம் வீரர் ரஷித் கானுக்கு, கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதால் அவர் தனது ஆல்-ரவுண்ட் பெர்பார்மன்ஸ் மட்டுமின்றி கூடுதலாக அணியை வழிநடத்த வேண்டிய கட்டாயத்திலும் உள்ளார்.

ரஷித் கான் வயதில் சிறியவராக இருந்தாலும் ஆப்கானிஸ்தான் அணியின் ஒரு முக்கிய அடையாளமாகவும் டி20 நட்சத்திரமாகவும் உள்ளார். அவர் இதுவரை 62 ஒருநாள் போட்டிகளில் 128 விக்கெட்டுகளையும், 38 டி20 போட்டிகளில் 75 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். இதுதவிர இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அவரது பங்கு 9 விக்கெட்டாக உள்ளது.

எனவே அடுத்து வரும் தொடர்களிலும் ஒரு கேப்டனாகவும், ஆல்-ரவுண்டராகவும் ரஷீத் கானின் பங்களிப்பு நிச்சயம் இருக்கும் என்பதை நாம் எதிர்பார்க்கலாம்.

Afghanistan squads for the only Test against @BCBtigers and the triangular T20I Series in September.#AFGvBAN pic.twitter.com/8ppcXZllOE

— Afghanistan Cricket Board (@ACBofficials) August 20, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

வங்கதேச அணிக்கு எதிராக ஆடவுள்ள டெஸ்ட் அணி விபரம்: ரஷித் கான் (கேப்டன்), இஷானுல்லா ஜானட், ஜாவித் அகமதி, இம்ராஹிம் ஸாத்ரான், ரஹ்மத் ஷா, ஹஸ்மத்துல்லா ஷாகிடி, அஸ்கர் ஆஃப்கன், இக்ரம் அலிகில், மொகம்மது நபி, குவாய்ஸ் அகமது, சயீத் அகமத் ஷிர்ஷாத், யாமின் அகமத்ஷாய், ஜாகிர் கான் பக்தீன், அப்சர் ஷசாய், ஷப்பூர் ஸாத்ரன்.

முத்தரப்பு டி20 தொடருக்கான அணி விபரம்: ரஷித் கான் (கேப்டன்), அஸ்கர் ஆஃப்கன், மொகம்மது நபி, ஹஸ்ரத்துல்லா ஷாஸாய், நஜீப் டரக்காய், ரஹ்மானுல்லா குர்பாஸ், முஜிப் உர் ரஹ்மான், ஷபியுல்லா ஷபாக், நஜீப் ஸாத்ரான், ஷாகிதுல்லா கமால், கரீம் ஜானட், குலாப்தீன் நயீப், பரீத் அகமத் மாலிக், ஷராப்புதின் அஸ்ரஃப், பாஸல், நிஷாஷாய், தவ்லத் ஸாத்ரான், நவீன் உல் ஹக்.

உலகக்கோப்பை தொடரில் பங்கேற்ற ஆப்கானிஸ்தான் அணி, ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்யாமல் தொடரில் கடைசி இடம் பிடித்தது. இதையடுத்து அந்த அணியின் அனைத்துவிதமான போட்டிகளுக்கும் இளம் வீரர் ரஷித் கான் கேப்டனாக செயல்படுவார் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணி அடுத்ததாக வங்கதேச அணிக்கு எதிரான ஒரே போட்டி கொண்ட டெஸ்ட் தொடரிலும், ஜிம்பாவே, வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிரான முத்தரப்பு தொடரிலும் பங்கேற்க உள்ளது.

இந்த தொடர்களுக்கான ஆப்கானிஸ்தான் அணியின் பட்டியலை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று வெளியிட்டது. அதன்படி முன்பு தெரிவிக்கப்பட்டது போன்று இளம் வீரர் ரஷித் கான் தலைமையில் ஆப்கானிஸ்தான் அணி இரண்டு தொடர்களையும் விளையாடவுள்ளது. இளம் வீரர் ரஷித் கானுக்கு, கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதால் அவர் தனது ஆல்-ரவுண்ட் பெர்பார்மன்ஸ் மட்டுமின்றி கூடுதலாக அணியை வழிநடத்த வேண்டிய கட்டாயத்திலும் உள்ளார்.

ரஷித் கான் வயதில் சிறியவராக இருந்தாலும் ஆப்கானிஸ்தான் அணியின் ஒரு முக்கிய அடையாளமாகவும் டி20 நட்சத்திரமாகவும் உள்ளார். அவர் இதுவரை 62 ஒருநாள் போட்டிகளில் 128 விக்கெட்டுகளையும், 38 டி20 போட்டிகளில் 75 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். இதுதவிர இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அவரது பங்கு 9 விக்கெட்டாக உள்ளது.

எனவே அடுத்து வரும் தொடர்களிலும் ஒரு கேப்டனாகவும், ஆல்-ரவுண்டராகவும் ரஷீத் கானின் பங்களிப்பு நிச்சயம் இருக்கும் என்பதை நாம் எதிர்பார்க்கலாம்.

வங்கதேச அணிக்கு எதிராக ஆடவுள்ள டெஸ்ட் அணி விபரம்: ரஷித் கான் (கேப்டன்), இஷானுல்லா ஜானட், ஜாவித் அகமதி, இம்ராஹிம் ஸாத்ரான், ரஹ்மத் ஷா, ஹஸ்மத்துல்லா ஷாகிடி, அஸ்கர் ஆஃப்கன், இக்ரம் அலிகில், மொகம்மது நபி, குவாய்ஸ் அகமது, சயீத் அகமத் ஷிர்ஷாத், யாமின் அகமத்ஷாய், ஜாகிர் கான் பக்தீன், அப்சர் ஷசாய், ஷப்பூர் ஸாத்ரன்.

முத்தரப்பு டி20 தொடருக்கான அணி விபரம்: ரஷித் கான் (கேப்டன்), அஸ்கர் ஆஃப்கன், மொகம்மது நபி, ஹஸ்ரத்துல்லா ஷாஸாய், நஜீப் டரக்காய், ரஹ்மானுல்லா குர்பாஸ், முஜிப் உர் ரஹ்மான், ஷபியுல்லா ஷபாக், நஜீப் ஸாத்ரான், ஷாகிதுல்லா கமால், கரீம் ஜானட், குலாப்தீன் நயீப், பரீத் அகமத் மாலிக், ஷராப்புதின் அஸ்ரஃப், பாஸல், நிஷாஷாய், தவ்லத் ஸாத்ரான், நவீன் உல் ஹக்.

Intro:Body:

https://www.aninews.in/news/sports/cricket/irfan-pathan-says-bcci-will-help-j-k-players-in-whatever-way-it-can20190819165414/

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.