கிரிக்கெட் போட்டிகள் டெஸ்ட், ஒருநாள், டி20 என்ற பரிமாணங்களில் நடத்தப்பட்டுவந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டாக பத்து ஓவர்கள் மட்டுமே கொண்ட டி10 கிரிக்கெட் தொடர் அபுதாபியில் நடத்தப்படுகிறது. இந்த அபுதாபி டி10 கிரிக்கெட் தொடரின் மூன்றாவது சீசன் இன்று முதல் நவம்பர் 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதனிடையே இந்தத் தொடருக்கான தொடக்க விழா அபுதாபியில் உள்ள சயத் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் உலகம் முழுவதிலுமிருந்து வந்திருந்த பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்தியாவிலிருந்து மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி இதில் கலந்துகொண்டார். மேலும் பாகிஸ்தான் பாடகர் அடிஃப் அஸ்லாம், நடிகைகள் ரகுல் ப்ரீத் சிங், பார்வதி நாயர் உள்ளிட்ட திரை நட்சத்திரங்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
-
Stars on stage. Fans in the stadium. Electricity in the air for our Opening Concert. #AbuDhabiT10 #t10league #t10season3 #inabudhabi #aldarproperties pic.twitter.com/NftyYsmjuD
— T10 League (@T10League) November 14, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Stars on stage. Fans in the stadium. Electricity in the air for our Opening Concert. #AbuDhabiT10 #t10league #t10season3 #inabudhabi #aldarproperties pic.twitter.com/NftyYsmjuD
— T10 League (@T10League) November 14, 2019Stars on stage. Fans in the stadium. Electricity in the air for our Opening Concert. #AbuDhabiT10 #t10league #t10season3 #inabudhabi #aldarproperties pic.twitter.com/NftyYsmjuD
— T10 League (@T10League) November 14, 2019
இந்த டி10 கிரிக்கெட் தொடரில் இரண்டு பிரிவுகளில் மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்கின்றன. இதில் முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங், பாகிஸ்தானின் அப்ரிடி, ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன், இலங்கையின் திசாரா பெரேரா, வெஸ்ட் இண்டீஸிலிருந்து டுவைன் பிராவோ, டேரன் சமி, தென் ஆப்பிரிக்காவின் டேவிட் மில்லர், ஹாசிம் அம்லா உள்ளிட்ட பல அதிரடி வீரர்களும் முன்னாள் நட்சத்திர வீரர்களும் களமிறங்குகின்றனர்.
இன்று மாலை நடைபெறும் முதல் போட்டியில் மராத்தா அரேபியன்ஸ் - நார்த்தர்ன் வாரியர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டிகள் அனைத்தும் சோனி சிக்ஸ், சோனி டென் 3 ஆகிய சேனல்களில் ஒளிபரப்பாகவுள்ளன.