தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன், ‘மிஸ்டர் 360’ என்றழைக்கபடும் ஏபிடி வில்லியர்ஸ். 36 வயதான ஏபிடி வில்லியர்ஸ், 2018ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார்.
அதன்பின் உள்ளூர் டி20 தொடர்களான ஐபிஎல், பிபிஎல் தொடர்களில் பங்கேற்று வருகிறார். அதிலும் ஆஸ்திரேலியாவின் பிக் பேஷ் லீக் தொடரில் பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக கடந்த சீசனில் டி வில்லியர்ஸ் பங்கேற்றார்.
இந்நிலையில் தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் டி வில்லியர்ஸ், இந்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ள பிக் பேஷ் லீக் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து டிவில்லியர்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“கூடிய விரைவில் எங்களுக்கு மூன்றாவது குழந்தை பிறக்கவுள்ளது. மேலும் கரோனா வைரஸ் சூழலில் நான் பயணத்தை தவிர்க்க விரும்பினேன். அதனால் இந்தாண்டு பிக் பேஷ் லீக் தொடரிலிருந்து விலக முடிவு செய்துள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
-
❤️ @ABdeVilliers17 pic.twitter.com/RnOU6vWAVM
— Brisbane Heat (@HeatBBL) October 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">❤️ @ABdeVilliers17 pic.twitter.com/RnOU6vWAVM
— Brisbane Heat (@HeatBBL) October 27, 2020❤️ @ABdeVilliers17 pic.twitter.com/RnOU6vWAVM
— Brisbane Heat (@HeatBBL) October 27, 2020
நடப்பு ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணிக்காக விளையாடி வரும் ஏபிடி வில்லியர்ஸ், 10 போட்டிகளில் களமிறங்கி 324 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:மன அழுத்தத்துடன் போராடிய மிட்செல் ஜான்சன்!