ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் 'நம்ம கோபி பவுண்டேசன்' என்ற தனியார் அமைப்பின் சார்பில் திறமைத் திருவிழா என்ற மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளை நடத்திவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி இந்த இரு அணிகளுக்கும் இடையே மூன்று போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்றுவருகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த தொடரில் இரண்டு 50 ஓவர்கள் போட்டிகளும், ஒரு டி20 போட்டியும் நடைபெறும் என்றும், இதில் இரு போட்டிகளில் வெல்லும் அணி வெற்றி பெற்றதாக அறிவித்து கேடயம் மற்றும் பரிசுகள் வழங்கப்படவுள்ளதாகவும் போட்டியை நடத்தும் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.