பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி இன்று (ஜன.15) தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்யத் தீர்மானித்தது.
அதன்படி ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் - மார்கஸ் ஹாரிஸ் இணை தொடக்கம் தந்தது. இதில் டேவிட் வார்னர் ரன் ஏதுமின்றி சிராஜிடமும், மார்கஸ் ஹாரிஸ் ஐந்து ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷர்துல் தாக்கூரிடமும் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த நட்சத்திர வீரர்கள் மார்னஸ் லபுசாக்னே - ஸ்டீவ் ஸ்மித் இணை, பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பைத் தடுத்தடுத்து. அதன்பின் 36 ரன்கள் எடுத்திருந்த ஸ்டீவ் ஸ்மித் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியனுக்குத் திரும்பினர்.
-
Marvellous, Marnus!
— ICC (@ICC) January 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
The Australia batsman brings up his fifth Test century, reaching the mark in 195 balls 🙌#AUSvIND | #WTC21 pic.twitter.com/OArvG4rptH
">Marvellous, Marnus!
— ICC (@ICC) January 15, 2021
The Australia batsman brings up his fifth Test century, reaching the mark in 195 balls 🙌#AUSvIND | #WTC21 pic.twitter.com/OArvG4rptHMarvellous, Marnus!
— ICC (@ICC) January 15, 2021
The Australia batsman brings up his fifth Test century, reaching the mark in 195 balls 🙌#AUSvIND | #WTC21 pic.twitter.com/OArvG4rptH
பின்னர் லபுசாக்னேவுடன் இணைந்த மேத்யூ வேட் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதில் மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்னஸ் லபுசாக்னே சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 4ஆவது சதத்தைப் பதிவு செய்தார்.
அதைத்தொடர்ந்து அரை சதம் கடப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட மேத்யூ வேட் 45 ரன்களில் நடராஜன் பந்துவீச்சில் ஷர்துல் தாக்கூரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் 108 ரன்கள் எடுத்திருந்த லபுசாக்னேவும் நடராஜன் பந்துவீச்சில் பெவிலியனுக்குத் திரும்பினார்.
-
T Natarajan strikes ☝️
— ICC (@ICC) January 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
The India paceman breaks the solid century stand, sending Matthew Wade back for 45.#AUSvIND ⏩ https://t.co/oDTm20rn07 pic.twitter.com/GcP3gxKaGm
">T Natarajan strikes ☝️
— ICC (@ICC) January 15, 2021
The India paceman breaks the solid century stand, sending Matthew Wade back for 45.#AUSvIND ⏩ https://t.co/oDTm20rn07 pic.twitter.com/GcP3gxKaGmT Natarajan strikes ☝️
— ICC (@ICC) January 15, 2021
The India paceman breaks the solid century stand, sending Matthew Wade back for 45.#AUSvIND ⏩ https://t.co/oDTm20rn07 pic.twitter.com/GcP3gxKaGm
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் டிம் பெய்ன், இளம் வீரர் காமரூன் கிரீன் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன்மூலம் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 274 ரன்களை எடுத்தது.
-
An unbeaten 61-run stand between skipper Tim Paine and Cameron Green takes Australia to 274/5 at stumps on day one of the Brisbane Test.#AUSvIND scorecard ⏩ https://t.co/oDTm20rn07 pic.twitter.com/0q8FR7j9TX
— ICC (@ICC) January 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">An unbeaten 61-run stand between skipper Tim Paine and Cameron Green takes Australia to 274/5 at stumps on day one of the Brisbane Test.#AUSvIND scorecard ⏩ https://t.co/oDTm20rn07 pic.twitter.com/0q8FR7j9TX
— ICC (@ICC) January 15, 2021An unbeaten 61-run stand between skipper Tim Paine and Cameron Green takes Australia to 274/5 at stumps on day one of the Brisbane Test.#AUSvIND scorecard ⏩ https://t.co/oDTm20rn07 pic.twitter.com/0q8FR7j9TX
— ICC (@ICC) January 15, 2021
அந்த அணியில் கேப்டம் டிம் பெய்ன் 38 ரன்களுடனும், காமருன் கிரீன் 28 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் அறிமுக வீரர் நடராஜன் தங்கராசு இரண்டு விக்கெட்டுகளையும், சிராஜ், தாக்கூர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளார்கள்.
இதையும் படிங்க: சரித்திரம் படைத்த 'சின்னப்பம்பட்டி எக்ஸ்பிரஸ்' நடராஜன் தங்கராசு!