ETV Bharat / sports

2011 உலகக் கோப்பை இறுதிச் சுற்றை நினைத்து சிலிர்க்கும் சச்சின்!

author img

By

Published : Feb 12, 2020, 8:43 PM IST

2011 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டியில் வென்ற தருணத்தை நினைத்தால், இப்போதும் சிலிர்க்கிறது என இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

2011 World Cup final still gives me goosebumps: Sachin Tendulkar

1983ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கனவு இந்திய ரசிகர்களைக் காட்டிலும் சச்சினுக்கு நீண்ட ஆண்டுகளாக இருந்தது. அதுவரை தான் பங்கேற்ற ஐந்து உலகக் கோப்பை தொடரில் நிறைவேறாத அந்தக் கனவு, 2011ஆம் ஆண்டில் தனது ஆறாவது உலகக் கோப்பையில் அதுவும் சொந்த மண்ணிலேயே நிறைவேறியது.

Sachin Tendulkar
சச்சின்

இந்திய அணி உலகக் கோப்பையை வென்றதும் கோலி, யூசஃப் பதான், ரெய்னா உள்ளிட்ட சக இந்திய வீரர்கள் தங்களது தோளில் சச்சினை சுமந்து மைதானத்தை வலம் வந்தனர். சச்சினுக்கு மட்டுமின்றி கிரிக்கெட் ரசிகர்களையும் இந்தத் தருணம் நெகிழ்ச்சியடைய செய்தது. இதனால், 20 ஆண்டுகளில் விளையாட்டின் சிறந்த தருணத்திற்கான லாரஸ் விருதின் இறுதிப் பட்டியலில் சச்சினின் பெயர் இடம்பெற்றிருந்து.

சச்சினை தோளில் சுமந்து மைதானத்தை வலம் வந்த கோலி, யூசப் பதான், ஹர்பஜன் சிங், ரெய்னா

பிப்ரவரி 16ஆம் தேதி வரை, சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அளிக்கும் வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையிலேயே இந்த விருதின் வெற்றியாளர் தேர்வு செய்யப்படுவார். இதைத்தொடர்ந்து, பிப்ரவரி 17ஆம் தேதி பெர்லினில் நடைபெறும் விழாவில் இதன் வெற்றியாளர் குறித்த விவரமும் அறிவிக்கப்படும்.

இந்த நிலையில், விளையாட்டுத் துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் இந்த லாரஸ் விருதில் இடம்பெற்ற சச்சினுக்கு வாக்களிக்குமாறு கேப்டன் கோலி, முன்னாள் வீரர் யுவராஜ் சிங் ஆகியோர் தனது ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டனர்.

2011 World Cup final
உலகக் கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் இந்திய வீரர்கள்

அதற்கு சச்சின், இந்தத் தருணம் இந்திய அணிக்கும், உலகில் உள்ள அனைத்து இந்தியர்களுக்குமானதுதான். 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரின், இறுதிப் போட்டியில் வெற்றிபெற்ற தருணத்தை நினைத்தால் இப்போதும் மெய் சிலிர்க்கிறது. இந்தத் தருணம் ஏதோ நேற்று நடந்ததைப் போலவே இருக்கிறது என யுவராஜ் சிங்கிற்கு பதிலளித்தார்.

மேலும், இந்தத் தருணம் நிச்சயம் நினைவில் இருக்கக் கூடிய தருணம்தான். நண்பராகவும் சக வீரராகவும் உன்னுடன் கிரிக்கெட் விளையாடியது மகிழ்ச்சியாக இருக்கிறது. தனக்காக ஆதரவு தெரிவித்ததற்கு நன்றி எனவும் தனக்கு வாக்குளிக்குமாறு கேட்டுகொண்ட விராட் கோலிக்கும் சச்சின் பதிலளித்தார்.

சச்சின் கூறியதைப் போலவே 2011இல் இந்திய அணி வென்ற தருணத்தை நினைத்தால், இந்திய ரசிகர்களுக்கும் சிலிர்க்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இதையும் படிங்க: நாத்திகர்களுக்கும் பிடித்த கடவுள் 'சச்சின் டெண்டுல்கர்!'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.