ETV Bharat / sports

முதலாவது டி20: இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி!

இந்தியாவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில், இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

1st T20I: England won by 8 wickets
1st T20I: England won by 8 wickets
author img

By

Published : Mar 12, 2021, 10:17 PM IST

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.

இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் கே.எல். ராகுல், ஷிகர் தவான், விராட் கோலி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 36 பந்துகளில் அரைசதம் அடித்து அணிக்கு உதவினார்.

ஸ்ரேயாஸ் ஐயர்
ஸ்ரேயாஸ் ஐயர்

இதன்மூலம், 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்களை எடுத்தது. இந்திய அணி தரப்பில் ஸ்ரேயாஸ் ஐயர் 67 ரன்களை குவித்தார். இங்கிலாந்து அணி தரப்பில், ஜோஃப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பின்னர் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் - ஜோஸ் பட்லர் இணை ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு அடித்தளத்தை அமைத்து கொடுத்தது.

பின்னர் 28 ரன்களை எடுத்திருந்த ஜோஸ் பட்லர், சஹால் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யு (LBW) முறையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். மறுமுனையில் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜேசன் ராய் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் 49 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

ஜேசன் ராய்
ஜேசன் ராய்

அதன்பின், களமிறங்கிய டேவிட் மாலன் - ஜானி பேர்ஸ்டோவ் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 15.3 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.

இதையும் படிங்க: மகளிர் கிரிக்கெட்: சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய மிதாலி ராஜ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.