ETV Bharat / sports

இந்தியா எனது 2ஆவது வீடு: ஆக்சிஜன் வாங்க நிதியுதவி அளித்த பிரெட் லீ

author img

By

Published : Apr 28, 2021, 12:13 PM IST

டெல்லி: ஆக்சிஜன் பற்றாக்குறையால் தவிக்கும் இந்தியாவிற்கு ஆக்சிஜன் வாங்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிரெட் லீ ரூ.41 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

Brett Lee
Brett Lee

கரோனா காரணமாக மட்டுமல்லாமல் பிராணவாயு‌ பற்றாக்குறை காரணமாக டெல்லி, உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் இறப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கரோனாவைக் கட்டுப்படுத்த ஆங்காங்கே மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுவருகிறது.

மிகப்பெரும் பிரச்சினையில் சிக்கியுள்ள இந்தியாவிற்கு சமீபத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரருமான பேட் கம்மின்ஸ் கரோனா தடுப்பு நிதியுதவியாக இந்தியப் பிரதமரின் ‘பிஎம் கேர்ஸ் நிதி’க்கு 37 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

இவரைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிரெட் லீ நிதியுதவி வழங்கியுள்ளார்.

இது குறித்து பிரெட் லீ அவரது ட்விட்டர் பக்கத்தில், "இந்தியா எனது இரண்டாவது வீடு. நான் ஆக்டிவாக கிரிக்கெட் விளையாடியபோதும் ஓய்வுபெற்ற பிறகும்கூட இந்திய மக்கள் என் மீது செலுத்தும் அன்புக்கும் பாசத்திற்கும் எல்லையே இல்லை.

அதனால் இந்திய மக்களுக்கு என்றென்றும் என் நெஞ்சத்தில் இடம் உள்ளது. இந்தியாவை தற்போது சூழ்ந்துள்ள கரோனா பிடியின் இறுக்கம் என்னை வாட்டமடையச் செய்துள்ளது.

அதனால் இந்திய மருத்துவமனைகள் ஆக்சிஜன் வாங்க Cryptorelief என்னும் தொண்டு நிறுவனம் மூலம் ஆக்சிஜன் வாங்க ஒரு பிட்காயின் (ரூ.41 லட்சம்) வழங்குகிறேன்.

இந்த இக்கட்டான நேரத்தில் நாம் எல்லோரும் உதவி தேவைப்படுவோருக்கு உதவ வேண்டும். நேரம் காலம் பார்க்காமல் கரோனாவுடன் போராடும் முன்களப் பணியாளர்களுக்கு எனது நன்றி.

மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் தேவையிருந்தால் மட்டும் முகக்கவசம் அணிந்தும் தகுந்த இடைவெளியைப் பின்பற்றியும் வெளியே வர வேண்டும். இந்த முயற்சியை முன்னெடுத்த பேட் கம்மின்ஸுக்கு வாழ்த்துகள்" எனக் கூறியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.