டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு (பிசிசிஐ) தலைவராக சேத்தன் ஷர்மா பதவி வகித்து வந்தார். இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஸ்டிங் ஆப்பரேஷனில் பேசிய சேத்தம் ஷர்மா, இந்திய கிரிக்கெட் வீரர்கள் சிலர் ஊக்கமருந்து எடுத்துக் கொண்டதாக சர்ச்சையாக பேசினார். இதனையடுத்து இந்த ஸ்டிங் ஆப்பரேஷனால் ஊடகங்கள், இந்திய கிரிக்கெட் அணி மற்றும் இந்திய கிரிக்கெட் அணி தேர்வர்கள் இடையிலான உறவு கடுமையாக பாதித்துள்ளது.
சர்ச்சை மிகுந்த விஷயங்களை ஷர்மா பேசி உள்ளார். ஏற்கனவே பிரபல கிரிக்கெட் வீரர்களான ராகுல் டிராவிட், விராட் கோலி மற்றும் ரோகித் ஷர்மா ஆகியோர் வெளிப்படையாகவோ அல்லது பயிற்சி நேரங்களிலோ சேத்தன் சர்மா உடன் பேசுவதில்லை. மேலும் டி20 ஆஸ்திரேலிய உலக கோப்பை போட்டியிலும் எந்த ஒரு வீரர்களும் சேத்தன் ஷர்மா உடன் பேசவில்லை.
இந்த நிலையில் பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் பதிவியில் இருந்து, தான் விலக உள்ளதாக, தனது ராஜினாமா கடிதத்தை சேத்தன் ஷர்மா அனுப்பினார். இதனை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஏற்றுக்கொண்டார். இருப்பினும், எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் இதுவரை பிசிசிஐ வெளியிடவில்லை.
-
BCCI chief selector Chetan Sharma resigns from his post. He sent his resignation to BCCI Secretary Jay Shah who accepted it.
— ANI (@ANI) February 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
(File Pic) pic.twitter.com/1BhoLiIbPc
">BCCI chief selector Chetan Sharma resigns from his post. He sent his resignation to BCCI Secretary Jay Shah who accepted it.
— ANI (@ANI) February 17, 2023
(File Pic) pic.twitter.com/1BhoLiIbPcBCCI chief selector Chetan Sharma resigns from his post. He sent his resignation to BCCI Secretary Jay Shah who accepted it.
— ANI (@ANI) February 17, 2023
(File Pic) pic.twitter.com/1BhoLiIbPc
அதேநேரம் சேத்தன் ஷர்மா பதவி விலகியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஸ்டிங் ஆப்பரேஷனில், முன்னாள் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி உடன் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு இருந்த பிரச்னையையும் சேத்தன் ஷர்மா பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்திய இந்திய மகளிர் அணி