புனே: ஐசிசி நடத்தும் 13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 5ஆம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று (அக். 19) புனேவில் நடைபெற்று வரும் 17வது லீக் ஆட்டத்தில் வங்கதேசம் - இந்தியா அணிகள் மோதியது.
இதில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக லிட்டன் தாஸ் மற்றும் தன்சித் ஹசன் களம் இறங்கினர். தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி வந்த இந்த ஜோடி அணிக்கு மளமளவென ரன்களை சேர்த்தது. 14.4 ஓவர்களில் 93 ரன்கள் குவித்த நிலையில், இந்த ஜோடியை குல்திப் யாதவ் பிரித்தார்.
-
India chase down the Bangladesh total with 51 balls to spare for their fourth successive #CWC23 win ⚡#INDvBAN 📝: https://t.co/v3xome9pao pic.twitter.com/m1YC2onskd
— ICC Cricket World Cup (@cricketworldcup) October 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">India chase down the Bangladesh total with 51 balls to spare for their fourth successive #CWC23 win ⚡#INDvBAN 📝: https://t.co/v3xome9pao pic.twitter.com/m1YC2onskd
— ICC Cricket World Cup (@cricketworldcup) October 19, 2023India chase down the Bangladesh total with 51 balls to spare for their fourth successive #CWC23 win ⚡#INDvBAN 📝: https://t.co/v3xome9pao pic.twitter.com/m1YC2onskd
— ICC Cricket World Cup (@cricketworldcup) October 19, 2023
அவரது பந்துவீச்சில் வங்கதேச அணியின் தொடக்க வீரர் தன்சித் ஹசன் 51 ரன்கள் எடுத்து எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதனைத் தொடர்ந்து களம் வந்த தற்காலிக கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 8 ரன்களில் ஆட்டமிழந்தார். மெஹிதி ஹசன் 3 ரன், லிட்டன் தாஸ் 66 ரன்கள் என அடுத்தடுத்து வெளியேறினர்.
பின்னர் முஜ்பிகுர் ரஹீம் - டவ்ஹித் ஹரிடோய் கைக்கோர்த்தனர். சிறிது நேரம் நிலைத்த ஜோடி, தங்களது நிதானமான ஆட்டத்தின் மூலம் அணிக்கு ரன்களை சேர்க்க முயற்சி செய்தது. ஆனால், ஹரிடோய் 16 ரன்களுடனும், முஜ்பிகுர் ரஹீம் 38 ரன்களுடனும் ஆட்டமிழந்து வெளியேறினர். அதைத் தொடர்ந்து களம் புகுந்த மஹ்முதுல்லாஹ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அணி 250 ரன்களை கடக்க உதவினார்.
50 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் அணி 8 விக்கெட்கள் இழப்பிற்கு 256 ரன்களை சேர்த்தது. இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் குல்தீப் யாதவ், ஷர்துல் தாகூர் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் அதிரடியாக விளையாடி அணியின் ரன்களை மளமளவென உயர்த்தினர். 12.3 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 88 ஆக இருந்த போது, அரைசதம் நோக்கி சென்று கொண்டிருந்த ரோஹித் சர்மா 48 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.
மறுபுறம் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்த சுப்மன் கில் அரைசதம் விளாசினார். அதன்பின் கில் 53 ரன்கள் எடுத்த நிலையில், மெஹதி ஹசன் பந்து வீச்சில் மஹ்முதுல்லாஹ்விடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதனையடுத்து ஷ்ரேயாஸ் ஐயர் - கோலி கூட்டணி சேர்ந்தது. ஆனால், சிறுது நேரத்தில் ஷ்ரேயாஸ் ஆட்டமிழக்க, கே.எல்.ராகுல் களம் இறங்கினார். மறுபுறம் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த கோலி சதம் விளாசி அசத்தினார்.
இறுதியில், இந்திய அணி 41.3 ஓவர்கள் முடிவில், 261 ரன்கள் எடுத்து 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் அணியை வீழ்த்தியது. விராட் கோலி 103 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 34 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். வங்கதேசம் அணி சார்பில் அதிகபட்சமாக மெஹதி ஹசன் 2 விக்கெட்களை கைப்பற்றினார்.
இதையும் படிங்க: Hardik Pandya : ஹர்திக் பாண்ட்யா திடீர் காயம்!