லண்டன்: ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான 3வது டெஸ்ட் போட்டியானது லண்டன் லீட்ஸ் மைதானத்தில் வைத்து நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 263 எடுத்தது. இங்கிலாந்து அணி 23 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாவது நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 142 ரன்கள் முன்னிலை வகித்தது. மிட்செல் மார்ஸ் 17 ரன்களும், டிராவிஸ் ஹெட் 18 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
மூன்றாவது நாள் ஆட்டம் மழை காரணமாக சற்று தாமதமாகத் தொடங்கியது. மிட்செல் மார்ஸ் 5 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் அடித்திருந்த நிலையில், தனது விக்கெட்டை கிறிஸ் வோக்ஸிடம் பறி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து களம் கண்ட அலெக்ஸ் கேரி வந்த வேகத்தில் 5 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார்.
ஸ்டார்க் 2 பவுண்டரிகளுடன் 16 ரன்களும், கேப்டன் கம்மின்ஸ் 1 ரன்கள் எடுத்த நிலையில் மார்க் வுட் பந்து வீச்சில் அடுத்தடுத்து அவுட் ஆகினர். ஒரு பக்கம் அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும், டிராவிஸ் ஹெட் நிதானமாக ஆடி அரை சதத்தைக் கடந்தார்.
இதையும் படிங்க: பணக்கார கிரிக்கெட் வீரர் யார்? டோனியா.. கோலியா.. இல்ல சச்சினா..? யார் தெரியுமா?
அதன் பின் இறங்கிய மார்ஃபி 2 பவுண்டரிகளுடன் 11 ரன்களுடன் ஆட்டமிழந்தார். கடைசியாக டிராவஸ் ஹெட் 7 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 77 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் அவுட் ஆனார். இரண்டாவது இன்னிங்ஸ் முடிவில் ஆஸ்திரேலியா அணி 224 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து சார்பில் ஸ்டூவர்ட் பிராட் 3 விக்கெட்டுகளும், கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டுகளும், மார்க் வுட் மற்றும் மொயின் அலி தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து, 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களான ஸாக் கிராவ்லி 1 பவுண்டரிகளுடன் 9 ரன்களும், பென் டக்கெட் 3 பவுண்டரிகளுடன் 18 ரன்கள் எடுத்து களத்தில் நிலைத்து நிற்கின்றனர். மூன்றாவது நாள் முடிவில் இங்கிலாந்து அணி 27 ரன்கள் எடுத்து உள்ளது.
மேலும், முன்னதாக நடந்த 2 டெஸ்ட் போட்டிகளுமே ஆஸ்திரேலியா அணி வென்று 2 - 0 என்ற புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: SAFF Championship: 9வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி!