ETV Bharat / sports

அயர்லாந்துக்கு எதிரான 2வது டி-20 : திரிபாதி, சஞ்சு சாம்ஸன் , அர்ஷ்தீப்க்கு வாய்ப்பு ? - பிசிசிஐ

அயர்லாந்துக்கு எதிரான 2வது டி-20இல் , இந்திய அணியின் பிளேயிங் 11இல் ராகுல் திரிபாதி , சஞ்சு சாம்ஸன் , அர்ஷ்தீப் சிங்கிற்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அயர்லாந்துக்கு எதிரான 2வது டி-20
அயர்லாந்துக்கு எதிரான 2வது டி-20
author img

By

Published : Jun 28, 2022, 1:01 PM IST

ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி , அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டி -20 போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டி-20 இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் இன்று 2வது டி-20 போட்டி நடைபெறுகிறது.

இந்த போட்டிக்கான பிளேயிங் 11ல் இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது. சஞ்சு சாம்ஸன் , திரிபாதி , அர்ஷ்தீப் சிங்கிற்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ரிதுராஜூக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் இஷான் கிஷனுடன் தொடக்க வீரராக தீபக் ஹூடா களமிறங்குவார்.

பிளேயிங் 11: இஷான் கிஷன் , தீபக் ஹூடா , சூர்யகுமார் யாதவ் , சஞ்சு சாம்ஸன் , ராகுல் திரிபாதி , ஹர்திக் பாண்ட்யா , தினேஷ் கார்த்திக் , புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக் , அர்ஷ்தீப் சிங் , யுஸ்வேந்திர சாஹல்.

தீபக் ஹூடாவின் இடத்தில் சஞ்சு சாம்ஸனும் , ஆவேஷ் கானின் இடத்தில் அர்ஷ்தீப் சிங்கும் களமிறங்க அதிக வாய்ப்பு உள்ளது. முதல் ஆட்டம் நடைபெற்ற அதே மைதானத்தில் தான் இந்த போட்டியும் நடைபெறுகிறது. மேலும் போட்டியில் மழை குறுக்கீடு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலாவது ஆட்டம் மழையின் குறுக்கீட்டால் 12 ஓவர்களாக குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.