ETV Bharat / sports

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்.. 3 அறிமுக வீரர்களுடன் இங்கிலாந்து அணி அறிவிப்பு! - டாம் ஹார்ட்லி

இங்கிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விளையாடயுள்ள நிலையில், அதற்கான அணியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இங்கிலாந்து அணி அறிவிப்பு
இங்கிலாந்து அணி அறிவிப்பு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 11, 2023, 10:51 PM IST

லண்டன்: அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விளையாட உள்ளது. அதன்படி இரு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஜனவரி 25ஆம் தேதி தொடங்க உள்ளது.

இந்நிலையில், இத்தொடருக்கான 16 பேர் கொண்ட அணியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இத்தொடருக்கு பென் ஸ்டோக்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் முதுகில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்ட ஜாக் லீச் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

  • Congratulations to Shoaib Bashir who has been selected in the England Men's Test squad to tour India!

    It was a breakthrough season in the County Championship for the 20-year-old as he took 10 wickets for @SomersetCCC pic.twitter.com/BiCX5TcbPz

    — County Championship (@CountyChamp) December 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மேலும், 6 முதல் தர போட்டிகளில் மட்டுமே விளையாடிய ஆஃப் ஸ்பின்னர் சோயப் பஷீருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மற்றொரு அறிமுக வீரராக டாம் ஹார்ட்லி இடம் பெற்றுள்ளார். 24 வயதான இவர் 2 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார் மற்றும் 20 முதல் தர போட்டிகளில் 40 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • 👋 to our three uncapped players! 🧢

    Shoaib Bashir 🏏
    Tom Hartley 🏏
    Gus Atkinson 🏏

    🇮🇳 #INDvENG 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿 | #EnglandCricket

    — England Cricket (@englandcricket) December 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இங்கிலாந்து அணி விவரம்: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ரெஹான் அகமது, ஜேம்ஸ் ஆண்டர்சன், கஸ் அட்கின்சன், ஜானி பேர்ஸ்டோவ், ஷோயப் பஷீர், ஹாரி புரூக், ஜாக் கிராலி, பென் டக்கெட், பென் ஃபோக்ஸ், டாம் ஹார்ட்லி, ஜாக் லீச், ஆலி போப், ஆலி ராபின்சன், ஜோ ரூட், மார்க் வுட்.

இதையும் படிங்க: புரோ கபடி: பெங்கால் வாரியர்ஸ் அணியிடம் வீழ்ந்த தமிழ் தலைவாஸ்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.