டெல்லி: ஒலிம்பிக்கில் இரண்டு முறை பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி. சிந்து உலக பேட்மிண்டன் கூட்டமைப்பின் தடகள ஆணைய உறுப்பினராக இன்று நியமிக்கப்பட்டார். இந்த பதவியில் சிந்து 2025 வரை இருப்பார்.
இவருடன் ஐரிஸ் வாங் (அமெரிக்கா), ராபின் டேபிலிங் (நெதர்லாந்து), கிரேசியா பாலி (இந்தோனேசியா), கிம் சோயோங் (கொரியா), செங் சி வெய் (சீனா) ஆகிய ஐந்து பேரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆணையத்தின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் விரைவில் நியமனம் செய்யப்படுவர்.
2016ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற சிந்து, இந்த ஆண்டின் தொடக்கத்தில் டோக்கியோ ஒலிம்பிக்கிலும் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். சிந்து இதுவரை இரண்டு வெள்ளி, இரண்டு வெண்கலம், ஒரு தங்கம் வென்றுள்ளார்.
இதையும் படிங்க: இறுதிப்போட்டியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த்