2007ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நடைபெற்றுவரும் இந்தியன் ஓபன் பேட்மிண்டன் தொடரானது வருகிற 24ஆம் தேதி டெல்லியில் தொடங்கப்படவுள்ளது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.
மேலும் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனைகளான பி.வி.சிந்து, சாய்னா நேவால் ஆகியோர் தங்களது முதல் சுற்றிலேயே உலகின் முன்னணி வீராங்கனைகளுடன் மோதவுள்ளனர்.
இதில் சாய்னா நேவால், சீனாவின் பை யூ போவையும், பி.வி.சிந்து ஹாங்காங்கின் சியுங் யுவையும் எதிர்கொள்ளவுள்ளனர். மேலும் சாய்னா நேவால் 2015ஆம் ஆண்டும், பி.வி.சிந்து 2017ஆம் ஆண்டும் இந்தியன் ஓபன் பேட்மிண்டன் தொடரில் கோப்பையை வென்று சாதனைப் படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இந்தியாவின் நட்சத்திர வீரர் சாய் பிரனீத், சக நாட்டவரான பிரனாய்வுடன் தனது முதல் சுற்று ஆட்டத்தில் மோதவுள்ளார். மேலும் இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் உறுதிபடுத்தப்பட்டுள்ளதால் போட்டிகள் நடைபெறுமா? என்ற சந்தேகங்களும் எழத்தொடங்கியுள்ளன. ஏனேனில் இதுவரை இந்தியாவில் 25 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளதால், இந்தியன் ஓபன் 2020 நடைபெறுவதில் சிக்கல் ஏற்படும் என ரசிகர்களால் நம்பப்படுகிறது.
இதயும் படிங்க:எதிர்காலத்தில் ரிசர்வ் டே இருந்தால் நல்லது - ஹர்மன்ப்ரீத் கவுர்!