ETV Bharat / sports

இறுதிப்போட்டியில் பிவி சிந்து தோல்வி!

இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து இறுதிப்போட்டியில் அகனே யமகுச்சியிடம் தோல்வியடைந்தார்.

பிவி சிந்து
author img

By

Published : Jul 21, 2019, 5:17 PM IST

இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜூலை 16-21ஆம் தேதி வரை அந்நாட்டின் தலைநகர் ஜகார்த்தாவில் நடந்து வருகிறது. இத்தொடர் முழுவதும் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பி.வி. சிந்து நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் உலக தரவரிசையில் மூன்றாம் இடத்திலுள்ள சென் யூவை 21-19, 21-10 என்ற நேர் செட்களில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

அதனையடுத்து இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் உலக தரவரிசையில் நான்காம் இடத்திலுள்ள அகனே யமகுச்சியுடன் மோதினார். ஃபார்மில் இருக்கும் பி.வி.சிந்து இந்தப் போட்டியில் வென்றுவிடுவார் என்றே பலரும் நினைத்தனர். ஆனால் போட்டியின் ஆரம்பத்திலிருந்தே அதிரடி காட்டிய அகனே யமகுச்சி முதல் செட்டை 21-15 என்ற கணக்கில் வென்றார்.

தங்கம் வென்ற அகனே யமகுஷிவுடன் பிவி சிந்து

தொடர்ந்து இரண்டாவது செட்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யமகுச்சி அந்த செட்டையும் கைப்பற்றினார். சுமார் 51 நிமிடங்கள் நீடித்த இறுதிப் போட்டியில் யமகுச்சி 21-15,21-16 என்ற நேர் செட் கணக்கில் பி.வி.சிந்துவை வீழ்த்தி இந்தோனேஷியா ஓபன் பட்டத்தை வென்றார்.

Intro:Body:

PV sindhu Fails in Indonesia open Final

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.